முதுகுவலியை குணப்படுத்தும் நவீன சிகிச்சை

Published By: Daya

26 Sep, 2019 | 03:54 PM
image

முதுகு வலி அதிலும் குறிப்பாக கீழ் பக்க முதுகு வலி. தலைவலி. கழுத்துவலி போன்ற வலிகளை எதிர்கொள்ளாதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் இதற்கு நிரந்தர நிவாரணத்தை தேடிக் கொண்டே இருப்பார்கள். தற்போது அறிமுகமாகியிருக்கும் Muscle Manipulation Techniques அதாவது தசைகளை தளர்வாக்க கையாளும் புதிய தொழில்நுட்பம் என்ற நவீன சிகிச்சையால் இந்த வலிகளை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் வைத்தியர்கள்.

பொதுவாக எம்மில் பலரும் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கும், உணவுக் கட்டுப்பாட்டுக்கும், யோகா பயிற்சிகளும் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்காமல், ஒரு ஆறு மாதம் கழித்தோ... ஓராண்டு கழித்தோ.. அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உடல் எடை குறைந்தவுடன் இதனை கைவிட்டுவிடுவார்கள். இதன் காரணமாக மீண்டும் அவர்களுக்கு உடல் எடை கூடுவதுடன் கழுத்து வலி, தலை வலி முதுகு வலியும் வந்து விடுகிறது. 

இதற்கு தற்போது Muscle Manipulation Techniques என்ற புதிய சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்த சிகிச்சை நரம்பியல் மருத்துவத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, இயன்முறை வைத்தியர்கள் வழங்கும் ஒரு வகையினதான பயிற்சி. இத்துடன் சில பிரத்யேக தசை தளர்வு சிகிச்சைகளையும் இணைத்து தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சிகிச்சையை Chiropractors, Osteopathic Doctors, Physical Therapists என மூன்று வகையில் வைத்தியர்கள்  சிகிச்சையினை வழங்குவதில் பிரத்தியேக பயிற்சியை பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரின் தலைவலி, கழுத்துவலி, கீழ்ப்பக்க முதுகு வலியின் தன்மையை பொருத்து கைகளாலோ அல்லது சிறிய கருவிகளாலோ தங்களது சிகிச்சைகளை தசைகளின் மீது பிரயோக படுத்துகிறார்கள். இன்னும் நுட்பமாக விவரிக்க வேண்டுமென்றால் எம்முடைய தசை பகுதிகளை தளர்வுறச் செய்து, அதனை இயல்பான நிலையில் இயங்கச் செய்கிறார்கள். இதன்மூலம் வலி குறைகிறது. இதன்போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றினால் தலைவலி, கழுத்து வலி, கீழ்ப்பக்க முதுகு வழி ஆகியவை முழுமையாக குணமடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32