சசிகுமாருக்கு ஜோடியான டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி

Published By: Daya

26 Sep, 2019 | 03:04 PM
image

டப்ஸ்மாஷ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை மிருணாளினி ரவி இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி அதன்பிறகு  விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து நகல், சாம்பியன் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.  அதன் பின்னர் ‘ஜிகிர்தண்டா ’படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது அவர் சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநரிடம் கேட்டபொழுது,“ உண்மைதான், சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். ஆனால் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது. படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்றார்.

இயக்குனர் பொன்ராம் இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மிருணாளினி ரவி தெரிவிக்கையில்,“ இந்த படத்தில் சத்யராஜின் மகளாகவும், கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறேன். இதற்கு மேல் எதையும் சொல்லக்கூடாது என்று இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார்.” என்றார். 

இந்த படத்தில் சத்யராஜ் வேடத்தில் நடிக்க முதலில் ராஜ்கிரணிடம் இயக்குநர் பொன் ராம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அவர் மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லையென்பதால் சத்யராஜ் நடிக்கிறார் என்றும் இயக்குநர் தெரிவித்தார். இயக்குநரும், சத்யராஜும் ஏற்கெனவே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி யிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18