நுவ­ரெ­லி­யாவில் தொடர்­ம­ழை, அதி­கரித்த குளிரால் விவசாய உற்பத்திகளுக்கு பெரும் பாதிப்பு

Published By: J.G.Stephan

26 Sep, 2019 | 11:07 AM
image

கடந்த சில தினங்­க­ளாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் அடை மழை பெய்து வரு­கின்­றது. இதன் கார­ண­மா­க ­ஆ­று­களில்  நீர்­மட்டம் உயர்ந்த நிலையில் காணப்­ப­டு­கின்­றது. 

அத்­தோடு பிர­தே­ச­மெங்கும் குளி­ருடன் கூடிய வானிலை நில­வு­வதால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு பாட­சாலை மாண­வர்­களின்  வரவும் குறைந்து காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும்  ஆங்­காங்கே பனி­மூட்­டத்தையும் காண­மு­டி­கின்­றது. 

தொடர்ந்து பெய்­து­வரும் மழை­யினால் நுவ­ரெ­லியா கிர­கறி வாவியின் நீர் மட்டம் உயர்ந்­துள்­ளது. மரக்­கறி தோட்­டங்­களில் தொழில் புரியும் தொழி­லாளர்­க­ளுக்கும் கடந்த சில தினங்­க­ளாக வேலை­யில்­லாமல் அவஸ்­தை­ப்ப­டு­கின்­றனர். உரு­ளைக்­கி­ழங்கு மற்றும் மரக்­கறி காணி­களில் மழை நீர் நிரம்­பி­யுள்­ளதால் மரக்­கறி மற்றும் உரு­ளைக்­கி­ழங்கு உற்­பத்­தியில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக விவ­சா­யிகள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இதே வேளை எவ்­வித முன்­ன­றி­விப்­பு­மின்றி அம்­பே­வல பகு­தியில் காணப்­படும் நீர்த்­தேக்­கத்தின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­ட­மை­யினால் அங்­கி­ருந்து அதிக நீர்­வெ­ளி­யா­கி­யுள்­ளது.  இதன்­கா­ர­ண­மாக எல்ஜின்–தங்­கக்­கலை -  லிப்­பக்­கலை, -  மெராயா மற்றும் கெள­லினா  போன்ற பகு­தி­களில் விவ­சா­யத்தை மேற்­கொண்­ட­வர்கள் பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர்.

இது மாத்­தி­ர­மன்றி குறித்த நீர்த்­தேக்­கத்தின் வான்கதவுகள் மாத்திரமன்றி அம்பே வல தொழிற்சாலையில் இருந்து வெளியா கும் கழிவு நீரும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தும்புகஸ்தலா ஓயாவில் கலக்கப் படுவதாகவும் கூறுப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55