உச்ச நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து பிரித்­தா­னிய பிர­தம­ருக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத்தம்

Published By: Digital Desk 3

26 Sep, 2019 | 11:00 AM
image

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தமை சட்­டத்­திற்குப் புறம்­பா­னது என அந் ­நாட்டு உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததை­ய ­டுத்து அந்­நாட்டுப் பிர­தமர் போரிஸ் ஜோன் ­ஸ­னுக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத் தம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை உச்­ச­நீ­தி­மன்­றத்தால் ஏக­ம­ன­தாக அளிக்­கப்­பட்ட மேற்­படி தீர்ப்­பை­ய­டுத்து பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபைக்கூட்­டத்தை இடை­ந­டுவில் முடித்துக்கொண்டு  தாய்­நாடு திரும்­பி­யுள்ளார்.

பாரா­ளு­மன்றம் கூடும்போது அத்­தி­யா­வ­சி­ய­மான கேள்­விகள்  மற்றும் அமைச்சரவை அறிக்­கை­க­ளுக்கு இட­முள்­ள­தாக பாராளு­ ம­ன்ற பிர­தி­நி­திகள் சபையின் சபா­நா­யகர் ஜோன் பெர்கவ் தெரி­வித்தார். உச்ச நீதி­மன் றம் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அளித்த தீர்ப்பின்போது பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்கு எந்தக் கார­ணமும் இல்லை எனவும்  பிறிக்ஸிட் காலக்­கெ­டு­வான எதிர்­வரும் ஒக்­டோபர் 31 வரை­யான 5 வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்­தைச் செயற்­ப­டுத்த மகா­ரா­ணி­யா­ருக்கு ஆலோ­ச­னை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தது.

நியூயோர்க் நகரில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த போரிஸ் ஜோன்ஸன் இந்த நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து மகா­ரா­ணி­யாரைத் தொடர்பு கொண்டு அவ­ருடன் உரை­யா­டி­ய­தாக  சிரே ஷ்ட அர­சாங்க அதி­கா­ரி­யொ­ருவர்  தெரி­வித்தார். ஆனால் அந்த அதி­காரி பிர­த­ம­ருக்கும் மகா­ரா­ணி­யா­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற உரை­யாடல் தொடர்பில் மேல­திக விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை.
அத்­துடன் பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன்  தனது அமைச்­ச­ர­வை­யுடன் 30 நிமிட தொலை­பேசி உரை­யா­ட­லொன்­றையும் மேற்­கொண்­டுள்ளார். இதன்­போது பாரா­ளு­ மன்ற பிர­தி­நி­திகள் சபையின் தலைவர்  ஜாகொப் றீஸ் மொக்  நீதி­மன்­றத்தால் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையை அர­சி­ய­ல­மைப்பு சதி­யொன்­றாக குறிப்­பிட்­ட­தாக அந்த உரை­யா­டலில் பங்­கேற்ற வட்­டா­ர­மொன்று தெரி­வித்­த­தாக  பிரித்­தா­னிய ஊட­கங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து மேற்­படி செயற்­கி­ரமம் தொடர்­பான கட்­டுப்­பாட்டை  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் முற்­றாக இழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அவர் பதவி விலக வேண்டும் என  எதிர்க்­கட்­சி­யினர் அழைப்பு விடுத்­துள்­ள னர்.

உச்ச நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து போரிஸ் ஜோன்ஸன் கருத்து வெளியி­டு­கையில்,  எதிர்­வரும் ஒக்­டோபர் 14 ஆம் திகதி  தனது அர­சாங்­கத்தின் கொள்­கைகளை  கோடிட்டுக் காட்ட  மகா­ரா­ணி­யாரின் உரை­யொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தனக்கு  அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாக இருந்­த­தாக  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஆனால்  அவர் தனது திட்­டங்­களை  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆராய்­வதை தடுத்து நிறுத்த முயற்­சித்­துள்­ள­தா­கவும்  பாரா­ளு­மன் றம்  தேவைக்கு அதி­க­மான காலம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்  அவ­ரது எதிர்ப்­பா­ளர்கள்  குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

உச்ச நீதி­மன்றம் இவ்­வா­றான அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்கு தனது  அதி­கார வரம்பை  விரி­வு­ப­டுத்தி பார­தூ­ர­மான தவ­றொன்றை மேற்­கொண்­டுள்­ள­தாக பிரித்­தா­னியப் பிர­த­மரின் அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்­பாத அதி­கா­ரி­யொ­ருவர்  தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் உச்ச நீதி­மன்றத் தலைவர்  ஹேல் சீமாட்டி குறிப்­பி­டு­கையில், மேற்­படி வழக்குத் தொடர்­பான தீர்ப்­பா­னது  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து  எப்­போது, எவ்­வாறு வில­கு­கி­றது என்­பது பற்­றி­ய­தல்ல எனவும் இது  பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா னம் பற்­றி­ய­தாகும் எனவும் கூறினார்.

எதிர்க்­கட்சித் தலைவர் ஜெரேமி கொர் பைன் தனது கட்சி ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­று­கையில்,  இந்த அர­சாங்கம் தான்  செய்­தது தொடர்பில் பொறுப்புக் கூற­வைக்­கப்­பட வேண்டும்.  போரிஸ் ஜோன்ஸன் நாட்டை தவ­றாக நடத்திச் சென்­றுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதனால்  தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­டாத இந்தப் பிர­தமர் பதவி விலக வேண்டும் எனத் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் ஸ்கொட்­லாந்து முத­ல­மைச் சர் நிகொலா ஸ்டர்ஜியனும் வேல்ஸ் முத­ல­மைச்சர் மார்க் ட்ரேக்­போர்ட்டும் சின் பெயின் கட்­சியின் தலைவர் மிசெல்லி ஒநீலும் பிர­தமர் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33