தமிழ் தலை­மை­களை பிர­தமர் ஏமாற்­ற­வில்லை : பிரதமருடன் இணைந்து தமிழ் தலை­மை­களே ஏமாற்­று­கின்­றன  - வியா­ழேந்­திரன்

Published By: Daya

26 Sep, 2019 | 04:04 PM
image

 (ஆர்.விதுஷா)

தமிழ்த் தலை­மை­களை பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்க ஏமாற்­ற­வில்லை. மாறாக  தமிழ்  தலை­மைகள்  அவ­ருடன்  இணைந்து  தமிழ்  மக்­களை  ஏமாற்­று­கின்­றார்கள்  என்று   தெரி­வித்த   மட்­டக்­க­ளப்பு  மாவட்ட  பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் எஸ்.வியா­ழேந்­திரன், ஜனா­தி­பதி வேட்­பாளர்  நிய­மனம் தொடர்பில்  தமது  கட்­சிக்குள்  தீர்க்­க­மான  முடிவை  காண­மு­டி­யா­த­வர்­களை  நம்பி  மீண்டும் சிறு­பான்மை  மக்கள் ஏமா­று­வதா என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில்  நேற்று  புதன்­கி­ழமை  இடம்பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இவ்­வாறு தெரி­வித்த  அவர்   தமிழ்  மக்கள்  மீண்டும்   பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை   ஆத­ரிப்­ப­தென்­பது தற்­கொ­லைக்கு  சம­னா­ன­தாகும்    எனவும்  அவர்  குறிப்­பிட்டார்.  

அவர் அங்கு மேலும்  கூறி­ய­தா­வது,  

சிறு­பான்­மை­யின  மக்­க­ளு­டைய  பிரச்­சி­னைக்கு இது­வ­ரையில் தீர்வு  காணப்­ப­ட­வில்லை. ஐக்­கி­ய­ தே­சிய  கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  நிய­மனம் தொடர்பில்   இது வரையில்  தீர்க்­க­மான  முடிவு எதுவும்  எட்­டப்­ப­ட­வில்லை. அவர்­களின்  பங்­கா­ளிக்­கட்­சிகள் ஜனா­தி­பதி  வேட்­பா­ளரை   தீர்­மா­னிக்கும் நிலைக்கு அவர்­க­ளு­டைய  தலை­மைத்­துவம்  பல­வீ­ன­மா­ன­தாக  இருக்­கி­றது.

 சஜித் பிரே­ம­தா­சவை  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டு­மெனின்  சில நிபந்­த­னை­க­ளுக்கு அவர் உடன்பட  வேண்டும்  என்று  பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கின்றார். அந்த  நிபந்­த­னை­க­ளுக்கு உடன்­பட்டு  வரு­பவர்  ஜனா­தி­ப­தி­யானால், அவர்  ஒரு  பொம்­மை­யா­கத்தான் நாட்டில் இருக்க நேரிடும். மீண்டும்   ஆட்சி  அதி­காரம்  அனைத்தும்  பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருக்கும்.  

கடந்த நான்கு  வருட காலங்­க­ளுக்குள்  தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்னும்  விட­யத்தில் தமிழ் தலை­மை­களை  இந்த  அர­சாங்கம்  மிக  கச்­சி­த­மாக  ஏமாற்­றி­யி­ருக்­கின்­றது.  எமது  மக்­க­ளு­டைய  உட­னடிப் பிரச்­சி­னை­க­ளான  காணி­வி­டு­விப்பு  உள்­ளிட்ட  பிரச்­சி­னை­க­ளுக்கு  இதுவரையில்  தீர்வு  காணப்­ப­ட­வில்லை.  காணி­வி­டு­விப்பு  தொடர்­பி­லான  பிரச்­சி­னையை  எடுத்துக்கொண்டால்  பகு­தி­ய­ளவில்  அதற்கு  தீர்வு  காணப்­பட்­டுள்­ளது. முழு­மை­யான  தீர்வு  இது  வரையில்  காணப்­ப­ட­வில்லை.  

வடக்கு – கிழக்கில்  முன்­னேற்­ற­க­ர­மான  செயற்­பா­டுகள்  இடம் பெற்­றுள்­ள­தாயின்  அவை  ஜனா­தி­பதி  மைத்­தி­ரிபால சிறி­சே­ன­ வி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்­கவோ,  அவ ­ருக்கு  ஆத­ரவு  தெரி­வித்­துக்­கொண்­டி­ருக்கும்  தமிழ்  தேசிய  கூட்­ட­மைப்போ  அதற்கு  உரிமை  கோர  முடி­யாது.  அர­சியல்  கைதி­களின் விடு­தலை  மற்றும்  காணாமல்  ஆக்­கப்­பட்டோர்  தொடர்­பி­லான  விட­யங்­களில்  எத்­த­கைய  முனேற்­றமும்  இது வரையில் எட்­டப்­ப­ட­வில்லை.    

இந்த  அர­சாங்கம் வடக்கு – கிழக்கு  மாகா­ணங்­களில்  எந்த அபி­வி­ருத்தி  பணி­க­ளை யும்  சரி­வர செய்­ய­வில்லை.

தமிழ் மக்­களை ஏமாற்றும் செயற்­பா­டு­களே  தொடர்ந்தும் இடம் பெற்று வரு­கின்­றன. ஆகவே இத்­த­கை­யதோர் நிலையில்  தமிழ்த் தலை­மை­களை பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்க ஏமாற்­ற­வில்லை.  மாறாக  தமிழ்  தலை­மைகள் அவ­ருடன்  இணைந்து  தமிழ்  மக்­களை ஏமாற்­றிக்­கொண்டு இருக்­கின்­றார்கள்.

கேள்வி: பொது­ஜன  பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்­களா?

பதில் : 2009  யுத்­தத்தின்  பின்னர்  அந்த  காயங்கள் ஆறாத  நிலையில்  தமிழ்  தலை­மைகள் சரத் பொன்­சே­காவை  ஆத­ரி­யுங்கள்  என கூறியபோது வடக்கு – கிழக்கு  மக்கள் அவ­ருக்கு பெரு­ம­ளவில் ஆத­ர­வ­ளித்­தார்கள்.  இந்­நி­லையில், யுத்த  குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை  வழங்­குவோம், ஊழல்  மோச­டி­க­ளுக்கு  தீர்வு  காண்போம்  எனக்­கூ­றிக்­கொண்டு  ஆட்­சிக்கு  வந்த  நல்­லாட்சி  அர­சாங்கம்  அதற்­கான  எந்த  தீர்­வையும் காண­வில்லை. தமிழ் தலை­மை­களின்  வாக்­கு­று­தி­களை நம்பி  நல்­லாட்சி  அர­சாங்­ கத்துக்கு வாக்­க­ளித்து  தமிழ் மக்கள்  ஏமாந்து போயுள்­ளார்கள். சிறிய விட­யங்­க­ளுக்கு கூட தீர்வு இல்லை. ஆகவே,   வடக்கு–கிழக்கில்  உள்ள சில  கட்­சிகள்    கோத்­த­பா­ய­விடம்  சில   நிபந்­த­னை­களை  முன்­வைத்து அவ­ருக்கு  வாக்­க­ளிக்க  தயா­ராகும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஆயினும், யுத்­த­குற்­றங்கள் உள்­ளிட்ட விட­யங்­களை நாம் நியா­யப்­ப­டுத்­த­வில்லை.  மாறாக  தொடர்ந்தும்  தமிழ்  மக் கள் ஏமாற்­றப்­படும் செயற்­பாட்டை  முடி­வுக்கு  கொண்டு  வர­வேண்டும்.      

செம்­மலை ஆலய  விவ­காரம்

பௌத்த  மத­கு­ருமார்,  கோவில்  வளா­கத்­துக்குள் பிக்கு ஒரு­வரின் உடலை  கொண்டு சென்று தகனம் செய்­தனர் என்­ப­தனை  ஏற்­றுக்­கொள்ள  முடி­யாது. ஒரு சில­ரு­டைய  இந்த  நட­வ­டிக்கை  வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.  ஒரு இன  மக்கள்  செறிந்து  வாழும் பகு­தியில் இன்­னு­மொரு இன மக்கள் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் போதுதான்  இன நல்­லு­றவை சீர்­கு­லைக்கும் செயற்­பாடு  ஆரம்­பிக்­கின்­றது.  ஆகவே  நீதி­மன்ற  உத்­த­ர­வுக்கு  அப்பால்  சென்று இந்த  செயல்  இடம் பெற்­றி­ருக்­கின்­றது. இந்­நி­லையில்  நீதித்­து­றையின் சுதந்­திரம்  பாது­காக்­கப்­ப­ட­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­ன­தாகும்.

இந்த செயலையிட்டு தான் வெட்கி  தலை  குனிவதாக  பிரதமர் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இந்த விடயம்  சிங் கள ஊடகங்களில் சிங்கள  மக்கள்  மத்தி யில் சொல்லப்பட்டிருக்கவில்லை.  மாறாக  தமிழ்  மக்கள்  மத்தியிலேயே  கூறப்பட்டி ருக்கின்றது.  ஆகவே,  பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  சிறுபான்மை  மக்களின்   வாக்குகளை  பெறுவதற்கு  மேற்கொள்ளும்  கபடநாடகமாகவே இதனை கருத வேண்டும். தென்னிலங்கைக்கு ஒரு  முகத்தையும் தமிழ் மக்களுக்கு வேறு  முகத்தையும்  காட்டும்  செயலையே  அவர்  மேற்கொண்டு  வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46