பிர­தமர் ரணிலின் நிபந்­த­னையும் தமிழ் மக்­களின் நிலைப்­பாடும்

Published By: Digital Desk 3

26 Sep, 2019 | 10:40 AM
image

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடி­யாத நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் முரண்­பாடு தொடர்ந்து வரு­கின்­றது. கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். அத்­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளிக் கட்­சி­க­ளான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய ஆகி­ய­னவும் சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன.  

இந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்க வேண்­டு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மற்­றொரு சாரார் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தானே கள­மி­றங்க வேண்டும் என்ற எண்­ணத்தில் செயற்­பட்டு வரு­கின்றார். இதனால் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் முரண்­பா­டான நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது. கட்­சியின் செயற்­கு­ழுவைக் கூட்டி இந்த விட­யத்­துக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வான கட்சி உறுப்­பி­னர்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால் செயற்­கு­ழு­வுடன் பாரா­ளு­மன்றக் குழு­வையும் கூட்டி வேட்­பாளர் விவ­காரம் தொடர்பில் தீர்­மானம் எடுக்­க­வேண்­டு­மென்று சஜித் பிரே­ம­தாஸ அணி­யினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.  

இத­னை­விட வேட்­பாளர் நிய­மன விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் கருத்­து­களும் உள்­வாங்­கப்­பட்டு முன்­ன­ணியின் பாரா­ளு­மன்றக் குழுவின் ஊடாக இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட வேண்­டு­மென்று பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.  
இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­மனம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கு­மி­டையில் தனிப்­பட்ட சந்­திப்­பு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. இதே­போன்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் மத்­தி­யஸ்­தத்தின் கீழும் சந்­திப்­புகள் இடம்­பெற்­றி­ருந்­தன. வேட்­பாளர் நிய­மன விவ­கா­ரத்தில் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு விட்­டுக்­கொ­டுக்­கவே முடி­யாது என்று அடம்­பிடித்து வந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது நிபந்­த­னை­க­ளுடன் அவரை வேட்­பா­ள­ராக நிய­மிக்க இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.  

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் தான் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும், ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்­ற­வுடன் ஆறு மாதம் முதல் ஒரு­வ­ருட காலப்­ப­கு­திக்குள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிக்க வேண்டும், புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும், பிர­சா­ரங்கள் ஒன்­றி­ணைந்து மேற்­கொள்­ளப்­பட வேண்டும் போன்ற நிபந்­த­னை­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாஸ இணங்­கினால் அவரை வேட்­பா­ள­ராக நிய­மிப்­பதில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.  

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் நாட்­டினை ஆளும் கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது வேட்­பாளர் நிய­ம­னத்தில் இறுதித் தீர்­மா­னத்தை எடுக்­காமல் இழு­ப­றிப்­பட்டு வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். ஏனெனில் ஆளும் கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் கட்சி உறுப்­பி­னர்கள் மத்­தியில் இத்­த­கைய கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளமை கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­விடும் என்ற அச்­சத்­தையும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  

இதனால் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்குள் விரைந்து தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் எண்ணம் கொண்­டுள்­ளனர். இந்­த ­நி­லையில் தான் தாமே போட்­டி­யி­ட­வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக செயற்­பட்டு வந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் சஜித் பிரே­ம­தாஸவை வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு இணங்­கி­யுள்ளார். ஆனால் இந்த நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் இன்­னமும் சஜித் பிரே­ம­தாஸ அணி­யினர் தீர்­மானம் எடுக்­க­வில்லை.  

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­துள்­ள­தாக கூறப்­படும் நிபந்­த­னைகள் சில நாட்டின் எதிர்­கா­லத்தைப் பொறுத்­த­ வ­ரையில் அவ­சி­ய­மா­ன­வை­யா­கவே தோன்­று­கின்­றன. ஏனெனில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டி­ருந்­தனர். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ, தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் இதற்­கான உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யி­ருந்­தனர். ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யா­னது இன்­னமும் முற்­றாக ஒழிக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் சிறு­பான்மைக் கட்­சிகள் மத்­தியில் மாற்று நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­போ­திலும் பெரும்­பான்மைக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவை இந்த முறை­மை­யினை ஒழிப்­ப­தற்கு ஏற்­க­னவே இணக்­கங்­களை தெரி­வித்­துள்­ளன.

 இதே­போன்றே மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வினைக் காண்­ப­தாக உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்­தன. முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் காலத்தில் சமா­தானப் பேச்­சுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மங்­கள முன­சிங்க தலை­மையில் அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தனது ஆட்­சிக்­கா­லத்தில் சமா­தானப் பேச்­சினை விடு­தலைப் புலி­க­ளுடன் மேற்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் அர­சியல் தீர்வுத் திட்­ட­மொன்­றையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்தார். 2000ஆம் ஆண்டு இந்த அர­சியல் தீர்வுத் திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது எதி­ர­ணி­யாக இருந்த ஐக்­கிய  தேசியக் கட்­சி­யினால் எரி­யூட்­டப்­பட்­டி­ருந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலும் பேச்­சுகள் நடத்­தப்­பட்­டன. சர்­வ­கட்சிக் குழு அமைக்­கப்­பட்டு அர­சியல் தீர்வு குறித்து ஆரா­யப்­பட்­டது. பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் அர­சியல் தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியும் எடுக்­கப்­பட்­டது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் வழி­ந­டத்தல் குழுவில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு அதி­காரப் பகிர்­வுடன் கூடிய அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது இந்த முயற்­சிகள் அனைத்தும் இடை­ந­டுவில் கைவி­டப்­பட்­டுள்­ளன.  
புதிய அர­சியல் யாப்பில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் தேர்தல் முறை மாற்றம் குறித்த செயற்­பா­டு­களும் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன. அந்த முயற்­சி­களும் தற்­போது கைவி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.  

எனவே அடுத்த ஜனா­தி­ப­தி­யாக எவர் வந்­தாலும் இந்த விட­யங்கள் குறித்து அக்­கறை செலுத்­த­வேண்­டிய அவ­சி­ய­முள்­ளது. புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சிகள் தொட­ரப்­பட வேண்டும். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு விட­யத்தில் சிறு­பான்மைக் கட்­சிகள் மத்­தியில் மாற்று நிலைப்­பா­டுகள் இருந்­தாலும் அந்த விட­யங்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டு இந்த விவ­கா­ரமும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிபந்­த­னைகள் அமைந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தா­கவே இருக்­கின்­றது.  

ஆனால் கட்­சியின் தலைமை நீடிப்பு மற்றும் பிர­தமர் பதவி நீடிப்பு என்­பன கட்­சியின் உள் விவ­கா­ரங்­க­ளா­கவே இருக்­கின்­றன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதித்­துள்ள நிபந்­த­னை­களில் புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் பாராட்டுதலுக்குரியதாகும்.  
 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் கட்சி மட்டத்திலும் பங்காளிக் கட்சிகள் மட்டத்திலும் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதேபோன்றே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும். அந்த வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கிக் கூறவேண்டும்.  

அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் தொடருமா அல்லது அந்த முயற்சிகள் கைவிடப்படுமா என்பது தொடர்பிலும்  ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தெட்டத் தெளிவாக தமது விஞ்ஞாபனங்களில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறான நிலையில்தான் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வர முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13