UPDATE : பாகிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழப்பு 38 ஆக உயர்வு

Published By: R. Kalaichelvan

26 Sep, 2019 | 10:02 AM
image

பாகிஸ்தானில் 5.8 ரிக்டெர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் தொகை 38 ஆக உயர்வடைந்துள்ளது.

பாகிஸ்தானில் மிர்பூர் நகரத்தை மையம் கொண்டு நேற்றய முன்தினம் மாலை 4.30 மணி அளவிலேல் இஸ்லாமாபாத், பெஷாவர், டிராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அத்துடன் சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட், ,முல்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் இரண்டாக பிளந்து சேதமாகின.

இரண்டாக பிளந்த சாலைகளின் நடுவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நகரங்களில் பல கட்டிடங்கள் சேதமாகின. 

மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாக். அரசு முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்தும் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளில் முன்னதாக 20 பேர் உயிரிழந்துள்ளநிலையில் தற்போது உயிரிழப்புகளில் எண்ணிக்கை 38 ஆக  உயிர்ந்துள்ளதோடு , 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறெனினும் மீட்பு நடவடிக்கைகளானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்தயாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47