ட்ரம்புக்கு எதிராக கண்டன பிரேரணையை நிறைவேற்ற முயற்சி

Published By: Digital Desk 3

25 Sep, 2019 | 05:33 PM
image

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் ஒரு தலைவர். இவரின் செயற்பாடுகள் பல இவருக்கு பிரச்சினையை ஏற்படுத்துவது தான் இதற்கு காரணம். 

சர்ச்சைகளின் உச்சமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் ஆம்பித்துள்ளது.

ட்ரம்ப் தமது அரசியல் எதிரியை தோற்கடிப்பதற்காக வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி நடினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பதவிநீக்கம் செய்வது தொடர்பான விசாரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் ட்ரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக  குற்றம் சாட்டியதை தொடர்ந்தே இந்த சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் ட்ரம்ப் இவ் குற்றாச்சாட்டினை பொறுப்பேற்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று விமர்வித்துள்ளார்.

அதிபர் ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

இதற்கு முன்பாகவும் ட்டிரம்புக்கு எதிராக பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல் கிரீனினால் வேண்டுகோள் ஒன்று  முன்வைக்கப்பட்டது. இவ் வேண்டுகோளுக்கு ஆதரவாக இந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த போதும்  இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10