மதங்களை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற பிக்குகள் - கணேஸ்வரன் வேலாயுதம் 

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 04:13 PM
image

மதங்களை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற பிக்குகளின் செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம் என மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் .கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்கு உட்படுத்திய ஒருசில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் ஜனநாயகத்தினை மதிக்கும் மக்களின் மனங்களில் சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை தீவிலே நீதியானது அனைவருக்கும் சமமானதாக கருதப்படுகின்றதா? என்ற ஐயத்தினை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த அசம்பாவிதம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் உயரிய கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும். அதன் கௌரவத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை யார் மேற்கொண்டாலும் அவர்கள் தராதரம் பார்க்கப்படாது தண்டிக்கப்படவேண்டும். 

இதற்கமைய நீதிமன்ற தீர்ப்பினை உதாசீனம் செய்து இறந்த பௌத்த துறவியின் உடலை ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்து மதங்களை நேசிக்கும் மக்களின் மனங்களை புண்படுத்திய அனைவரும் தண்டிக்கப்படுவதன் ஊடாகவே இலங்கையின் நீதித்துறையின் மீதான நம்பிக்கையினை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றோம்.

மேலும் நீதிமன்ற தீர்பினை எடுத்துரைத்து நீதியினை நிலைநாட்ட முயற்சித்த சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு நீதியான தீர்வு கிடைப்பதற்கு அனைத்து சக்திகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49