சஜித்தின் அழைப்புக்கு திஸ்ஸ அத்தநாயக்க பதில்

Published By: R. Kalaichelvan

25 Sep, 2019 | 02:50 PM
image

நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னுடன் இணைந்து செயற்படமுன்வருமாறு ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருந்த நிலையில் திஸ்ஸ அத்தநாயக்க அதற்கு சாதகமான பதிலொன்றை தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் அழைப்பொன்றை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரின் அழைப்பை அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுள்ள நிலையில், பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு இன்றைய தினம் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பல்வேறு காரணங்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் உறுப்பினர்களை மீண்டும் கட்சியுடன் இணையுமாறு விடுத்துள்ள அழைப்பு வரவேற்கத்தக்க விடயமாகும்.

உங்களது கடிதம் குறித்து ஆழமாக சிந்தித்தேன். உங்களது அழைப்பை ஏற்று இணைந்து செயற்படும் முடிவை எடுத்துள்ளேன்.

கடந்த 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலை இருந்தும், அந்த வாய்ப்பை நழுவவிட்டதாலேயே கட்சியிலிருந்து நான் விலகிசெயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி வெற்றிபெற வைக்கும் எனது நோக்கம் நிறைவேறும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதால் உங்களுடன் கரம்கோர்த்து செயற்பட தயார் என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31