சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் ரணில் விதித்துள்ள நிபந்­தனை இது தான் !

Published By: R. Kalaichelvan

25 Sep, 2019 | 10:09 AM
image

(ரொபட் அன்­டனி, ஆர்.யசி)

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில்  கட்­சியின் பிரதி தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவை  வேட்­பா­ள­ராக   கள­மி­றக்­கு­வ­தற்கு கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நிபந்­த­னை­களை விதித்­துள்ளார்.

அலரி மாளி­கையில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன்  நேற்­று­ மாலை நடை­பெற்ற சந்­திப்­பின்­போதே நிபந்­த­னை­க­ளுடன் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக ஐ.தே.க. வட்­டா­ரங்கள்  தெரி­வித்­தன.

அதா­வது   பிர­த­ம­ரா­கவும்   கட்­சியின் தலை­வ­ரா­கவும் தொடர்ந்தும்   ரணில் விக்­ர­ம­சிங்க நீடிக்­க­வேண்டும் ,  ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும்  ஆறு மாதங்கள் தொடக்கம் ஒரு­வ­ருட காலப்­ப­கு­திக்குள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை  முற்­றாக ஒழிக்­க­வேண்டும் , ஜனா­தி­பதி தேர்தல் பிர­சாரம் ஒன்­றி­ணைந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் ஆகிய  நிபந்­த­னை­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாச இணக்கம் தெரிவித்தால்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரை கள­மி­றக்­கலாம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க  தெரி­வித்­துள்­ள­தாக கட்சித் தகவல்கள்  தெரி­வித்­தன.

நேற்று மாலை  ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தவி­சாளர் கபிர் ஹஷிம்  செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் அமைச்­சர்­க­ளான  லக்ஷ்மன் கிரி­யெல்ல ரவி கரு­ணா­நா­யக்க மலிக் சம­ர­விக்­ரம உட்­பட கட்­சியின்  சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற சந்­திப்­பி­லேயே இந்த இணக்­கப்­பாட்­டினை பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.   .    

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு இந்த நிபந்­த­னை­களை சஜித் பிரே­ம­தாச ஏற்­றுக்­கொண்டால் அதற்­கான நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் இவற்றை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் கட்­சியின் செயற்­கு­ழுவில் வாக்­கெ­டுப்­பினை நடத்தி வேட்­பாளர் தெரிவு தொடர்பில் தீர்­மானம் எடுப்­பது என்றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நிபந்­த­னை­யுடன் வேட்­பாளர் நிய­ம­னத்­துக்கு இணக்கம் தெரி­வித்­துள்ள போதிலும் நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச அணி­யினர் நேற்று முடிவு எத­னையும் தெரி­விக்­க­வில்லை. தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டனும் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே தமது முடி­வினை அறி­விப்­ப­தாக சஜித் அணி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

இன்­றைய தினம் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்ட பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் தமது முடி­வினை சஜித் அணி­யினர் அறி­விப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்த விட­ய­ததில் இணக்­கப்­பாடு காணப்­பட்டால் நாளைய தினம் செயற்­கு­ழுவை கூட்டி அதன் அங்­கீ­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது. இல்­லையேல் செயற்­கு­ழுவில் வாக்­கெ­டுப்பை நடத்தி வேட்­பா­ளரை தெரிவு செ்யவேண்­டிய நிலை ஏற்­படும் என்று கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இதே­வேளை  ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான கபிர் ஹஷீம்  அகில விராஜ் காரிய வசம் நவீன் திசாநாயக்க ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று இரவு சந்தித்து  இது  தொடர்பில் மேலதிக  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி  நடைபெறவுள்ளதுடன் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள்  ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47