புதிய தொழில்­நுட்பம் ஊடாக பய­ணி­க­ளுக்கு பாது­காப்­பான சூழலை வழங்கும் வாய்ப்பை PickMe புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள மென்­பொ­ரு­ளான ‘ETA Sharing’ஊடாக பய­ணிகள் தங்க­ளது இருப்­பி­டங்­க­ளுக்கு அண்­மித்­துள்ள இணைப்புத் தொடர்­புகள் மூலம் எந்த நேரத்­திலும் ஒரு பயணத் தோழ­னாக தொடர்­பு­களை பேண முடியும்.

இந்த நீடித்த பயன்­பா­டான PickMe App மூலம் பய­ணி­க­ளுக்கு பாது­காப்­பையும் மற்றும் ஒரு அமை­தி­யான ஒரு சூழலை வழங்­கு­வதே நிறு­வ­னத்தின் நோக்­க­மாகும்.

விசே­ட­மாக ETA Sharing தனி­யாக பய­ணிக்கும் பெண்­க­ளுக்கும், இள­வ­ய­தி­ன­ருக்கும் மற்றும் இரவு நேரம் வாடகை வண்­டி­களில் செல்­வோ­ருக்கும் மிகவும் சிறந்­தது.

PickMe, பய­ணிகள் கையடக்கதொலை­பே­சியின் ஊடாக கொழும்­பிலும் புற­நகர் பகு­தி யிலும் தனது வலைப்­பின்­ன­லுக்கு உட்பட்­ட­வர்­களை துரி­த­மாக தொடர்பு கொண்டு சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடி­வதோடு போக்­கு­வ­ரத்து சேவையை பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­கூட்­டியே பதிவு செய்­வ­தற்­கு­ரிய விருப்­பத்தை தெரி­விப்­ப­தற்கு ‘Book Later’ என்ற வச­தியும் இந்த App இல் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­துடன் PickMe வணிக நிறு­வ­ன­மா­கவும் செயற்­ப­டு­கின்றமை குறிப்­பி­டத்­தக்­கது.