இலங்கைக்கு கடத்த முயன்ற 350 கிலோ கிரேம் கடல் அட்டைகள் பறிமுதல் -  இருவர் கைது

Published By: Digital Desk 4

24 Sep, 2019 | 04:30 PM
image

 மன்னார் வளை குடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ  கிரேம் பதப்படுத்தப்பட்ட  கடல் அட்டைகள் பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் பொலிஸார்  கடத்தலுக்கு பயண்படுத்திய வாகனம் மற்றும் கடத்தல்காரர்கள் இருவரை இன்று  கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்ததுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில்  தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் காவல்நிலைய ஆய்வாளர் கனகராஜ், துணை ஆய்வாளர் கனேச மூர்த்தி ஆகியோருக்கு  இரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மெரைன் போலிஸாரை கண்டதும் வேன் ஒன்று நிற்காமல் சென்றது.

 சந்தேகமடைந்த பொலிஸார் பாம்பன் காவல் சோதனை சாவடிக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து குறித்தகாரை மடக்கி பிடித்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்ததில்  காரில் 7 சாக்கு மூட்டைகளில் சுமார் 350 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

 இதனையடுத்து மெரைன்  பொலிஸார் விசாரனை செய்ததில் இராமேஸ்வரத்தை சேர்ந்த லிங்கநாதன்,சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை பதப்படுத்தி சாக்கு பைகளில் கட்டி காரில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

 தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய   காரையும் பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்  மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

விசாரனைக்கு பின்னர் கடல் அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் சுமார் 70 இலட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் இலங்கையில் இருந்த கடத்தி வரப்பட்ட ஏழு கிலோ கடத்தல் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளளமையும்  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10