இறுதி யுத்தத்தில் உயிர் இழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடைகளும் இல்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர் நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும்.  இந்த செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பின் எந்தத் தலையீடுகளும் வராது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து துக்கதினம் அனுஷ்டிக்க கூடாது எனவும் அதையும் மீறி புலிகளை நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.