அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று முன்தினம் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றியிருந்தமை வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருந்தது.
இதன் போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து உலகத்தை விடுவிக்க அமெரிக்க துணை இருக்கும் என்று தெரிவித்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ட்ரம்ப் சந்தித்திருந்தார்.
இச் சந்திப்பில் அவர் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயற்பட தயாராக இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஆகிய இருவரும் விருப்பப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் உதவ தயார் என்று ட்ரம்ப் கூறினார்.
இதன் போது காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீரல்கள் குறித்த பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் அங்கு மக்கள் அமைதியாக வாழ, அனைவரும் சமமாக நடத்தப்படுவதே தனது விருப்பம் என்று மேலும் தெரிவித்தார்.
ட்ரம்பின் விருப்பத்திற்கு பதிலளித்த இம்ரான் கான் ''உலகின் மிகவும் வலிமையான நாடாக உள்ள அமெரிக்காவுக்குச் சர்வதேச ரீதியாக சில கடமைகள் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள். ஆனால், எங்களுடன் பேச இந்தியா மறுத்து வருகிறது'' என்று கூறினார்.
"காஷ்மீர் பிரச்சனை மிகத் தீவிரமான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று நான் நினைக்கிறேன். உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்காவால் ஐ.நா.வில் தனது கருத்துக்களைச் சிறப்பாக வலியுறுத்த முடியும். அதனால் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM