ரணில், சஜித், கருவுக்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்ன?

Published By: Vishnu

24 Sep, 2019 | 03:33 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எடுக்கும் வகையில் இதுவரையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை இறுதி நிலைபாட்டை எட்ட முடியாதுள்ள நிலையில்  நேற்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் கூடி பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்தனர். 

நேற்றிரவு இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

இரவு 8.30 மணியளவில் கூடிய இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தலைவர் -பிரதித்தலைவர் இடையில் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. 

நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற கூறியிருந்த நிலையில் நாயை தினம் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் இது குறித்து அமைச்சர் சஜித் பிரேமதாச கூறுகையில் நாளை அல்லது நாளை மறுதினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறினார். 

அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளைய தினம் கூடினாலும் அதில் எடுக்கும் தீர்மானங்களை போலவே ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற கூட்டத்தையும் கூட்டி அதிலும் தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன்  ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியமான தீர்மானம் எடுக்கும் இந்த நேரத்தில் பாராளுமன்ற பங்காளிக் கட்சிகளின் முழுமையான ஆதரவு இருக்க வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைகள் மற்றும் அரசாங்கம் நேரிக்கடிகளில்  இருக்கும் போது மாத்திரம் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெறாது இவ்வாறான முக்கியமான தீர்வுகளை எடுக்கும் நேரத்திலும்  அவர்களின் முழுமையான ஆதரவும் இருக்க வேண்டும். 

எனவே ஐக்கிய தேசிய முன்னணியின் சகல தரப்பையும் வைத்தே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38