இயக்குனரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகிறது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகை மேகா ஆகாஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட, சிம்பு நடித்த வந்தா ராஜா தான் வருவேன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது கண்ணை நம்பாதே, சைக்கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM