விடுதலை புலி போராளிகளுக்கு நிவாரணம் வழங்கும் காணாமல்போனோர் அலுவலகம் : சரத் வீரசேகர 

Published By: R. Kalaichelvan

24 Sep, 2019 | 01:35 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் காணாமல்போனோர் தொடர்பில் கண்டறிவதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கு நிவாரணக் கொடுப்பனவை வழங்கிக்கொண்டிருக்கிறது.

அக்கொடுப்பனவு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலுத்தப்படுவதாக இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரின் குடும்பங்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சம்மேளனம் இன்றைய தினம் இலங்கை கண்காட்சி மற்றும் சம்மேளன நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் பொதுச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடனும் நடைபெறவிருக்கிறது. 

இதுதொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத்தொடரில் இராணுவத்தினர் செய்தாக குற்றத்தைச் செய்ததாக ஏற்றுக்கொண்டு, அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக அரசாங்கம் இராணுவத்தினரை சர்வதேசத்தின் மத்தியில் காட்டிக்கொடுத்தது. அதன் காரணமாக இராணுவத்தினரில் பலருக்கு வெளிநாடு செல்வதற்கான வீசா அனுமதி மறுக்கப்பட்டது. 

அதேபோன்று அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் காணாமல்போனோர் தொடர்பில் கண்டறிவதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கு நிவாரணக் கொடுப்பனவை வழங்கிக்கொண்டிருக்கிறது. அக்கொடுப்பனவு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01