யுவதியின் கண்களில் இருந்து கண்ணீராக வடிந்த கற்கள்

Published By: Daya

24 Sep, 2019 | 04:42 PM
image

ஆர்மீனியா- ஸ்பான்டரியன் கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கண்ணீருக்கு பதிலாக கண்களிலிருந்து கற்கள் வந்தமை அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்மீனியா- ஸ்பான்டரியன் கிராமத்தைச் சேர்ந்த செடெனிக் கசாரியன் என்ற 22 வயதான யுவதி ஒருவர், தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியின் கண்களிலிருந்து ஒருநாளைக்கு 50 சொட்டு கண்ணீருக்கு பதிலாக கற்கள் வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தனது குடும்பத்தின் வறுமையையும் தாயை தன்னால் கவனிக்க முடியாத நிலையையும் நினைத்து தினமும் கண்ணீர் சிந்தி வந்துள்ளார். 

வழமைபோன்று தனது தாயுடன் ஒருநாள் மதிய வேளையில் உணவு உட்கொள்ளும் போது உணவில் விசப் பூச்சி ஒன்று விழுந்த நிலையில் இருவரும் பசியால் இறைவனை தியானித்தது அழுதுள்ளனர். 

இந்நிலையில், இத்தனை வருட காலம் தனது தாயை நினைத்தும் வறுமையின் கோரத்தாண்டவத்தையும் நினைத்து  கண்ணீர் சிந்திய அந்த யுவதிக்கு கண்ணீர் வரவில்லை. 

மாறாக கண்களிலிருந்து கண்ணீர் கட்டிகள் வழிய ஆரம்பித்துள்ளன.

தனது மகளின் நிலை கண்டு பதறிய தாய் அயலவர்களின் துணையுடன் அரச வைத்தியசாலையில் காண்பித்துள்ளார். 

அந்நாட்டு வைத்தியர்கள் யுவதியின் நிலையை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளதோடு இதுவரையில் இவ்வாறானதொரு நிலையை எந்தவொரு நோயாளரிடமும் கண்டதில்லை என தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right