இந்து சமயத்தின் புனிதத்தன்மையை கெடுக்கின்ற ஒரு செயல் ; இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி

Published By: Digital Desk 4

24 Sep, 2019 | 12:10 PM
image

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் உயிர் இழந்த பௌத்த தேரரது உடலை தகனம் செய்த தன்மையானது ஒரு அநாகரிகமான செயல் என்பதுடன் இந்து சமயத்தின் புனிதத்தன்மையை கொடுக்கின்ற ஒரு செயல் அத்துடன் நமது இந்து மக்களுடைய விழுமியங்களை மதிக்காத செயலாக கருதப்படுகின்றது.என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி இதனை வன்மையாக கண்டிக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற நாகரீகமற்ற செயற்பாடு ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதித்துறைக்கு ஒரு அவமானமாக கருதமுடியும் என்பதுடன் நீதித்துறையின் தீர்ப்பு தொடர்பாக விளக்க முற்பட்ட சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்கிய செயற்பாடும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாக நோக்கப்படுகின்றது.

நாட்டில் நல்லாட்சி இடம்பெறுவதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட நாட்டினுடைய நீதித்துறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது அல்லது நீதித்துறையின் உடைய தீர்ப்பு வலிதற்றதாக காணப்படுகின்றதா என்கின்ற ஐயப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது.

அல்லது இலங்கை நீதி வடக்கு கிழக்குக்கு பொருந்தாதா என்கின்ற கேள்வி கூட எங்களுடைய என்ன பாட்டில் ஏற்படுகின்றது

தமிழர்கள் 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடியது ஏன் என்கின்ற அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கின்ற நேரமாக இந்த நேரத்தை நாம் நோக்குகின்றோம் வடக்கு கிழக்கு ஆகிய எங்களுடைய தாயக பூமியில் நாங்கள் எங்களுடைய சமயத்தை பின்பற்றுகின்ற உரிமைகூட இந்த நாட்டினுடைய பேரினவாத சக்திகளால் மறுக்கப்படுகின்ற ஓர் நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்கள் வோறு ஒரு போராட்ட வடிவத்துக்குள் தங்களை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படும் ஆகவே இதை உணர்ந்து பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்ட நபர்கள் அந்த சிந்தனையில் இருந்து மேலெழுந்து வந்து தமிழர்களும் ஜனநாயக ரீதியாக இந்த நாட்டில் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு முனைய வேண்டும் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32