உயிர்நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று.!

Published By: Robert

18 May, 2016 | 09:32 AM
image

யுத்தவெற்றியின் ஏழாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு உயிர்நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்ல பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர்  பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முப்படை பிரதானிகள் நிகா்வில் கலந்துகொள்கின்றனர். 

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக நிலவிய உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் 7வது  ஆண்டு  நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 4 மணிக்கு பத்தரமுல்லையில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி அமைந்துள்ள பிரதேசத்தில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வு எளிமையான வகையிலும் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ரீதியிலும் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன , பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் நிகழ்வில் கலந்துகொள்வர். 

மேலும் இறுதி யுத்தத்தை தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு கலை நிகழ்வுகள், முப்படைகளினதும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளினதும் அணிவகுப்புகள், மத  நிகழ்வுகள்  என்பன சுதந்திர சதுக்கதில் இடம்பெறவுள்ளன. 

கடந்த காலங்களில் இராணுவ வெற்றி தினமாக கொண்டாடி வந்தபோதிலும் இம்முறை வெற்றி தினமாக கொண்டாடபடாது விடுதலை தினமாக கருதியும் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நினைவேந்தியும் அனுஷ்டிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.  

கடந்த காலங்களில் போலன்றி இப்போது நாட்டில் நில்லிணக்கம், சகவாழ்வு பற்றிய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கபடும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07