நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளல்லர் - மாவை

Published By: Digital Desk 3

24 Sep, 2019 | 10:57 AM
image

(ஆர்.யசி)

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக யார் வர­வேண்டும் என்­பதை எம்மால் தீர்­மா­னிக்க முடி­யுமே தவிர ஐக்­ கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க நாம் அவர்­களின் பங்­கா­ளிக்­கட்சி அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­களை முன்­வைக்க வேண்டும். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்­களின் தீர்­மானம் தேர்தல் முடி­வு­களை மாற்றும் என்ற எண்ணம் பிர­தான கட்­சி­க­ளுக்கு இப்­போது விளங்­கு­கின்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தமிழ் மக்­களின் நம்­பிக்­கையை பெற்­ற­வ­ராக இருக்க வேண்டும் என்ற ஆலோ­ச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வ­துடன் அண்­மையில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் தமக்­கான ஆத­ரவை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வழங்கும் என்ற கருத்­தினை முன்­வைத்­தி­ருந்­தனர். பிர­தான கட்­சிகள் தமக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் ஆத­ரவு வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் இது குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ரா­ஜா­விடம்  வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

இந்த நாட்டில் உரு­வாகும் எந்­த­வொரு அர­சாங்­கத்­தையும் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்­தாக வேண்டும். யுத்த காலத்தில் தமிழ் மக்­களின் மீதான அடக்­கு­முறை கார­ண­மாக அப்­போது உரு­வா­கிய அர­சாங்­கத்­துக்கு தமிழ் மக்­களின் ஆத­ரவு கிடைக்­காத போதிலும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இருந்­தது.

ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆத­ரித்­த­மைக்­கான பிர­தான கார­ணமே ஏற்­க­னவே இருந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வரக் கூடாது என்­ப­தற்­கா­கவே ஆகும். அவ்­வாறு இருக்­கையில் இன்றும் தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக தமிழ் பேசும் மக்கள் இருக்­கின்­ற­மையே உண்­மை­யாகும். ஆனால் ஒரு தரப்பை எதிர்க்கும் கார­ணத்­திற்­காக இன்­னொரு தார்ப்­பி­ன­ருக்கு கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற கட்­டாயம் இல்லை. தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வு­களை வழங்க முன்­வ­ரு­வ­தாக பல அர­சாங்­கங்கள் , பல தலை­வர்கள் எமக்கு வாக்­கு­று­தி­களை கொடுத்தும் இன்­று­வரை அவை பலிக்­க­வில்லை. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்­க­ளுக்கு சில நன்­மைகள் நடந்­துள்­ளன.

குறிப்­பாக இரா­ணு­வத்தின் வச­மி­ருந்த காணிகள் விடு­விக்­கப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டன. சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் காணா­மல்­போன எமது உற­வு­களை கண்­ட­றியும்  அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. அர­சியல் கைதிகள் விட­யத்தில் சில விடு­விப்­பு­களும்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்னர் இருந்த ஆட்­சியை விடவும் இந்த ஆட்­சியில் எமக்கு சில நன்­மைகள் கிடைத்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

ஆனால் இது போது­மான விட­யங்கள் அல்ல. எமது மக்­க­ளுக்­காக முன்­னெ­டுத்த விட­யங்கள் அனைத்­துமே இடை­ந­டுவே கைவி­டப்­பட்­டுள்­ளன. புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கி தீர்வு காண எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் முடி­வு­றாது உள்­ளது. காணிகள் விடு­விப்பு முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுப்­பதில் தாம­தங்கள், வீட்டு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே இவ்­வா­றான நிலையில் இப்­போது ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் ஆத­ரிக்கும் தரப்பு வெற்­றி­பெறும் என்ற நம்­பிக்­கையில் பிர­தான வேட்­பா­ளர்கள் தமிழ் வாக்­கு­களை தக்­க­வைக்க முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஆனால் இவர்­களை ஆத­ரிக்க முன்னர் இவர்கள் தமிழ் மக்­க­ளுக்கு கொடுக்கும் வாக்­கு­று­திகள் என்ன என்­பதே முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­களில் முன்­வைக்கும் தீர்­வுகள் என்ன? அர­சியல் அமைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் தமது நிலைப்­பாடு என்ன? இவற்­றுக்­கான தெளி­வான பதி­லையும் நம்பகத்தன்மை வாய்ந்த வாக்குறுதிகளையும் அவர்கள் கொடுக்க வேண்டும். அதன் பின்னரே எந்த தரப்புடனும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க எமது ஆதரவை எவருக்கும் வழங்க தயாரில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு பிரதான கட்சியினதும் பங்காளிக் கட்சி இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04