அரச ஊழியர்கள் சுகயீன போராட்டம் ; நாடளாவியரீதியில் அரசாங்க சேவைகள் பல ஸ்தம்பிதம்

Published By: Vishnu

23 Sep, 2019 | 08:08 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 34 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் நாடளவிய ரீதியில் முன்னெடுத்த  சுகயீன விடுமுறை பணி பகிஷ்கரிப்பு காரணமாக அரசாங்க சேவைகள் பல ஸ்தம்ப்பிதமடைந்தன. 

அத்துடன் இதனால் அரச சேவையை நாடும் பொதுமக்கள் பலரும் இன்று பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். 

இந்த சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக நாடளவிய ரீதியில் பிரதேச செயலகங்கள்,  மாகாண சபைகள்,  முக்கிய திணைக்களங்கள் பலவற்றில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

நாளைய தினம் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரால், அரச சேவையாளர்களில் நிறைவேற்று சேவைகளில் உள்ளோருக்கு விஷேட கொடுப்பனவை வழங்கும் வன்னம் முன்வைக்கவுள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஒரு நாள்  சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்துவதாகவும், நிறைவேற்று நிர்வாக சேவைகளில் உள்ளோருக்கு மேலதிகமாக அந்த கொடுப்பனவு உரிய விகிதாசாரங்களின் கீழ் ஏனைய அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும்  இலங்கை அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர்  அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

இதனிடையே இன்று திணைக்களங்களில் சேவையைப் பெற சென்ற பொது மக்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொண்ட அசெகரியங்களால் விரக்தியில் பல இடங்களில் குழப்பங்களில் ஈடுபட்டனர். 

குறிப்பாக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களத்தின் சேவைகள் பல கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அங்கு சேவைப் பெறச் சென்ற  பொது மக்கள் விரக்தியில் பாதையை மறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 

இதனால் இன்று முற்பகல் வேளையில் பொரளை - கொட்டாவ வீதியின் பத்தரமுல்லை பகுதியில்  ஒரு பகுதி முற்றாக மூடப்பட வேண்டிய நிலை ஏர்பட்டது.

இதனைவிட மோட்டார் வாகன திணைக்களத்திலும் சேவைப் பெறச் சென்ர பொது மக்கள்  ஏமாற்றத்துடன்  திரும்ப நேரிட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில்,  இலங்கை கிராம சேவகர்கள் சங்கம்,  அகில இலங்கை நிர்வாக அதிகாரிகள் சங்கம்,  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னனி,  இலங்கை ஆசிரியர் சங்கம்,  முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் உள்ளிட்ட 34  தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26