வடக்கு பாடசாலை வகுப்பு பிரிவுகளில்; 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர்

Published By: Digital Desk 4

23 Sep, 2019 | 05:31 PM
image

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை  விட அதிகமாக காணப்பட்டதுடன் , அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களிற்கும் தெரிவித்து இவ்விடயத்தினை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும்; பெற்று சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47