காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது

Published By: Rajeeban

23 Sep, 2019 | 10:07 AM
image

இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து  தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும்  காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால்  பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது.

இராணுவத்தினர் தங்களை கைதுசெய்து காவல்துறையினரிடம் கையளித்தனர் அவர்கள் எங்களை ஆறு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சுதந்திரம் கோருகின்றீர்கள் கற்களால் எங்களை தாக்குகின்றீர்கள் என தெரிவித்து அவர்கள் எங்களை தாக்கினர் என தந்தையும் மகனும் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் நான் மரணிக்கவேண்டும் என விரும்பினேன் என தந்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் நான் வலுவற்றவனாக அதிகாரமற்றவனாக காணப்பட்டேன் என தெரிவித்துள்ள தந்தை பின்னர் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்து எங்களை விடுதலை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

அங்கு நடந்தவைகளால் நான் இன்னமும் அச்சத்தின் பிடியி;ல் சிக்கியுள்ளேள் இரவில் நான் அச்சமடைகின்றேன் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன் வெளியில் செல்வதில்லை என மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

என்னால் இரவில் உணவு உண்ணவோ உறங்கவோ முடியவில்லை அவர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

காஸ்மீரின் 17 ற்கும் மேற்பட்ட குடும்பத்தவாகள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.’

சிறுவர்கள் கல்எறியும் போராட்டங்களில் ஈடுபடுவது வழமை என தெரிவித்துள்ள பிபிசி அதேவேளை இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என சட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இதற்கான எந்த காரணங்களையும் எந்த நியாயப்பாட்டினையும் முன்வைக்காது அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என  மிர் உர்பி என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குடும்பத்தவர்கள் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாh.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன, உலகின் அனைத்து மக்களிற்கும் பொதுவான மனித உரிமைகள் காஸ்மீரில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது 14 வயது மகன் காவல்துறையினரால் தடுத்துவைத்துள்ளனர் என பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளாh.

இரவில் வந்து எனது கணவரை கைதுசெய்தனர் பின்னர் எனது கணவரை விடுதலை செய்வதற்காக எனது மகனை தருமாறு கேட்டு தடுத்து வைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகனை காவல்நிலையத்தில் பார்த்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.

நான் எனது மகனை பார்க்க சென்றவேளை அவன் கதறிஅழ தொடங்கிவிட்டான் நான் எந்த குற்றமும் செய்யவில்லை கல் எறியவில்லை ஏன் அவர்கள் என்னை கைதுசெய்தனர் என அவன் கதறினான் என தந்தை தெரிவித்துள்ளார்.

தங்கள் பிள்ளைகளிற்கும் இந்த கதி நேரலாம் என காஸ்மீரில் பலர் அச்சத்துடன் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய இராணுவத்தினர் தெரிவித்தனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17