ஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்

Published By: J.G.Stephan

22 Sep, 2019 | 01:14 PM
image
  • வெற்றி அடையப்போவது கோத்­தா­ப­யவே
  • கூட்­ட­மைப்பால் பய­னில்லை புலி­களின் வழியில் விக்கி
  • பொய்­யு­ரைக்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் 
  • சீனாவின் திட்­டத்­திற்கு மாற்று யோசனை உண்டு
  • அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யாக மைத்­தி­ரி-­ரணில் அரசு
  • ராஜ­ப­க் ஷ­வி­ன­ருடன் தமிழ்­த­ரப்பு ஒப்­பந்தம் செய்ய வேண்டும்


தெற்­கா­சி­யாவில் பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட நாடு­களில் பிரச்­சி­னைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்­பதால் தான் நாம் அதிக அக்­கறை காட்­டு­கின்றோம். இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்­கின்ற தேர்­தலில் ஆட்­சி­மாற வேண்டும்.

ஆட்சி மாறாது என்றால் எத­னை­யுமே செய்­ய­ மு­டி­யாது. நானோ அல்­லது எமது கட்­சியோ கூறு­வ­தற்கு செவி­சாய்­கின்ற ஆட்சி அமைக்­கின்­ற­போது நாம் தமி­ழர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்­கு­மாறு கூறுவோம். அது­மட்­டு­மன்றி, தமி­ழர்­க­ளுக்­காக இலங்கை வீதி­க­ளி­லேயே இறங்கி அவர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்­காக போராடத் தயா­ரா­கவே இருக்­கின்றேன் என்று பார­தீய ஜனதா கட்­சியின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான கலா­நிதி சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷவின் திரு­மண வர­வேற்பு நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த அவர், தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்­த­போது சம­கால விட­யங்கள் தொடர்­பி­லான வினாக்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தார். அவை வரு­மாறு:

கேள்வி:- இலங்­கையில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்­புக்கள் விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்த ஆட்சி யாரு­டைய கைகளில் இருக்க வேண்­டு­மென்று கரு­து­கின்­ றீர்கள்?

பதில்:- யார் ஆட்­சிப்­பீ­டத்தில் அம­ர­வேண்டும் என்­பதை நாம் கூற­மு­டி­யாது. அது இலங்­கையின் உள்­ளக விடயம்.  இறை­மை­யுள்ள இலங்கை நாட்டின் மக்­களே அதற்­கான ஆணையை வழங்க வேண்டும். அதில் நாம் தலை­யீ­டு­களைச் செய்ய முடி­யாது. ஆனால், அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்ற தீவி­ர­வாத எதிர்ப்பு மாநாடு நடை­பெற்­றி­ருந்­தது.

இதன்­போது பாகிஸ்­தா­னுக்குச் சார்­பாக தற்­போ­தைய இலங்கை அர­சாங்கம் வாக்­க­ளித்­தி­ருந்­தது. தமி­ழ­கத்­தி­லி­ருந்து காஷ்மீர் வரையில் உள்ள அனைத்து தீவி­ர­வா­தி­களும் பாகிஸ்­தானின் பின்­ன­ணியில் செயற்­ப­டு­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கை­யில், அத்­த­கை­ய­தொரு நாட்­டுக்கு ஆத­ர­வாக இலங்கை செயற்­பட்­ட­மை­யா­னது புரி­யா­தி­ருக்­கின்­றது.

இந்த நாட்டில் அதி­கா­ர­ப்ப­கிர்வு குறித்து பேசப்­ப­டு­கின்ற நிலையில் தற்­போது மாகாண சபைகள் இயங்­காத நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மீண்டும் பழைய நிலை­மைக்கே இந்­த­நாடு சென்­று­விட்­டது. ஆகவே எடுத்த எடுப்­பி­லேயே ராஜ­பக் ஷ தரப்­பி­னரை எதிர்க்­காது தமிழ் மக்கள் சிந்­திக்க வேண்டும்.

கேள்வி:- இலங்கை ஆரம்ப நிலை­மைக்குச் சென்­றுள்­ள­தாக கூறு­கின்­றீர்­களே. அதற்கு யார் காரணம் என்­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே கார­ண­மா­கின்­றது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முயற்­சி­களை எடுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அதனை உரிய காலத்தில் செய்­தி­ருக்­க ­வில்லை. அத­னா­லேயே நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது.

இறை­மை­யுள்ள நாடு என்ற அடிப்­ப­டையில் அமெ­ரிக்­கா­வுடன் உற­வுகள் வைத்­தி­ருப்­பதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யா­கவே இருக்­கின்­றது. அத்­துடன் பாகிஸ்­தா­னுக்கும் ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கின்­றது.

கேள்வி:- நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீது குற்றம் சுமத்­து­கின்­றீர்கள். ஆனால், தமிழ் மக்­களின் பெரு­வா­ரி­யான ஆணை இருக்­கின்­றதே?

பதில்:- தமிழ் மக்களின் ஆத­ரவு அவர்­க­ளுக்கு இருக்­கின்­ற­தைப்­போன்று ராஜ­ப­க் ஷ­வுக்கும் சிங்­கள மக்கள் மத்­தியில் ஆத­ரவு இருந்­தது. அச்­சந்­தர்ப்­பத்­தினை அவர்கள் பயன்­ப­டுத்­த­வில்லை. ஆகவே  அவர்­களால் பயனில்லை. அவர்­களை மாற்­ற­வேண்டும்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் விக்­னேஸ்­வரன் தலை­மையில் உரு­வா­கின்ற கூட்­ட­ணியை மாற்­றாக எடுக்­க­லாமா?

பதில்:- இல்லை. அவர்கள் முழு­மை­யாக விடு­த­லைப்­பு­லி­களின் நிலைப்­பா­டு­களை கொண்­ட­வர்கள். அவர்­களால் உணர்ச்­சி­க­ர­மான விட­யங்­க­ளையே முன்­னெ­டுக்க முடியும். செயற்­பாட்டு ரீதியில் எத­னையும் முன்­னெடுக்க முடி­யாது.

கேள்வி:- தமி­ழர்­களின் அர­சியல் நிலைப்­பாடு எவ்­வாறு அமை­ய­வேண்டும்?

பதில்:- தமிழ் மக்கள் அர­சி யல் நிலைப்­பாட்­டினை மாற்­ற­வேண்டும். சிறி­சேன – ரணில் கூட்­ட­ணியும் எத­னையும் செய்­ய ­வில்லை. அதற்கு மாற்­றாக இருக்கும் ஒரே­தெ­ரிவு ராஜ­பக் ஷ தரப்­பி­னரே. ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­ப­யவை எழுந்­த­மா­ன­மாக எதிர்க்­காது ஆட்­சியில் அமர்­வ­தற்கு ஆத­ர­வ­ளித்து விட்டு கோரிக்­கை­களை முன்­வைத்து அவற்றை நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும். எதிர்த்து வாக்­க­ளித்தால் கோரிக்­கை­களை முன்­வைக்க முடி­யா­தல்­லவா? அதற்­கா­கவே தமி­ழர்­க­ளுக்­காக இந்­துத்­துவ கொள்­கை­க­ளு­ட­னான புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளேன்.

கேள்வி:- தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லிகள் என்றால் ராஜ­ப­க் ஷ­வினர் சீனா சார்­பு­டை­ய­வர்கள் என்ற பகி­ரங்க விமர்­சனம் இருக்­கின்­றதே?

பதில்:- இல்லை. அதனை நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். உதா­ர­ ண­மாக அம்­பாந்­தோட்­டையை எடுத்­துக்­கொள்­ளுங்கள். தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களே சீனா­வுக்கு 99 வரு­டங்கள் முழு­மை­யான உரித்தை வழங்­கி­னார்கள். ராஜ­பக் ஷ காலத்தில் சீனாவின் முத­லீ­டுகள் இருந்­தாலும் அவை அனைத்­துமே இலங்­கையின் நிரு­வா­கத்தின் கீழ் தான் காணப்­பட்­டன. அதே­போன்று அமெ­ரிக்­காவின் பேச்­சினைக் கேட்டு பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக இலங்கை செயற்­ப­டு­கின்­றது. எனவே இந்­தி­யாவால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை கொள்ள முடி­யா­துள்­ளது.

கேள்வி:- 'ஒரே மண்­டலம் ஒரே பாதை' திட்­டத்­தினை முன்­வைத்து சீனா தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் காய்­களை நகர்த்­தி­ய­போது இந்­தியா சீற்­ற­ம­டைந்­த­தோடு அந்த திட்­டத்­திற்கு எதிர்ப்­பி­னையும் வெளி­யிட்­டி­ருந்­ததே?

பதில்:- சீனாவின் ஒரே ­மண்­ட லம் ஒரே பாதை திட்­டத்­தினை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஆனால் குன்மிங், ராங்கூன், கொல்­கத்­தாவை இணைக்கும் வகையில் பாதை­ய­மைப்­ப­தற்கே சீனா முயல்­கின்­றது. அதற்கே நாங்கள் எதிர்ப்­புக்­களை தெரி­வித்தோம். அவர்­களின் திட்­டப்­படி கடல் – தரை­வ­ழியை இணைக்­கப்­பார்க்­கின்­றார்கள். அதற்­காக மாற்று முன்­மொ­ழி­வொன்று எம்­மிடம் உள்­ளது. அது­பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தயா­ரா­கவே உள்ளோம். அதா­வது, மும்பை, உத்­தி­ர­பி­ரதேஷ், கயி­லாச பிர­தேசம் ஊடாக பாதை­ய­மைக்க இட­ம­ளிக்க முடியும். அது­பற்­றிய பேச்­சுக்­களை சீனா­வுடன் ஆரம்­பித்­துள்ளோம். இந்த முயற்­சியை சீனா விரும்­பாது விட்டால் பாகிஸ்­தா­னி­ட­முள்ள காஷ்மீர் பகு­தியை நாம் மீட்­டதன் பின்னர் அதன் வழி­யா­கவும் தரை­வ­ழிப்­பா­தையை அமைக்­கலாம்.

கேள்வி:- தமி­ழர்கள் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு சர்­வ­தே­சத்­திடம் நீதி­கோரி நிற்­கையில், அவர்கள் எந்த அடிப்­ப­டையில் ராஜ­பக் ஷ தரப்­பி­னரை ஆத­ரிப்­பது?

பதில்:- முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்த விடு­த­லைப்­பு­லி­களை ஒடுக்­கி­ய­மைக்­காக ராஜ­ப­க் ஷ­வுக்கு 99 சத­வீ­த­மான இந்­தி­யர்கள் நன்றி செலுத்­தி­யுள்­ளார்கள். புலிகள் தமி­ழ­கத்தில் ஆயுத கலா­சா­ரத்­தினை ஏற்­ப­டுத்தி சக­போ­ரா­ளி­யான பத்­ம­ நா­பா­வையே படு­கொலை செய்­தனர். ராஜ­பக் ஷ போரை நிறைவு செய்­துள்ளார். பின்னர் மனித உரி­மைகள் விட­யத்­தினை கையி­லெ­டுத்­த­போதே, அமெ­ரிக்கா தனது நலன் நிறை­வ­டைந்­த­வுடன் இதனை கைவிட்­டு­ விடும் என்று நான் எச்­ச­ரித்­தி­ருந்தேன். ஆனால் யாரும் கேட்­வில்லை. கடை­சியில் அதுதான் நடந்­துள்­ளது. அமெ­ரிக்­காவை நான் நன்கு அறிந்­தவன்.

ராஜ­பக் ஷ மீது மனித உரிமை விட­யங்கள் உட்­பட அவர் குறித்து எதிர்­ம­றை­யான பொய்­யான பிர­சா­ரங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்­காவும் இதன் பின்­ன­ணியில் உள்­ளது. எமது நாட்டின் சில அதி­கா­ரி­களும் இதற்கு உடந்­தை­யாக இருந்­துள்­ளனர். இதனால் தான் அவர் மீது தமி­ழர்கள் தவ­றான மனப்­பான்­மையை கொண்­டுள்­ளனர். அதனை மாற்ற  வேண்டும். ராஜ­பக் ஷ அமெ­ரிக்­காவின் தாளத்­திற்கு ஆட­மாட்டார். அதே­நேரம் இந்­தி­யா­வினை முழு­மை­யாக ஆத­ரிப்பார் என்று நான் கூற­வில்லை. மாறாக இந்­தி­யா­வுக்கு எதி­ரான சக்­தி­களை ஆத­ரிக்­க­மாட்டார்.

கேள்வி:- தொடர்ச்­சி­யாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக குர­லெ­ழுப்பி வரு­கின்­றீர்­களே. உங்­க­ளுக்கும் உரிமை கேட்டு போரா­டிய அவர்­க­ளுக்கும் இடையில் தனிப்­பட்ட ரீதியில்  பிரச்­சி­னைகள் உள்ளனவா?

பதில்:- அன்டன் பால­சிங்கம் முதலில் என்னை சி.ஐ.ஏ.முகவர் என்று பிர­சாரம் செய்தார். என்­மீது அவர் எவ்­வாறு பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க முடியும். நான் அமெ­ரிக்­காவில் நீண்­ட­கா­ல­மாக இருந்­தவர் என்ற அடிப்­ப­டை­யிலும், இட­து­சா­ரித்­து­வத்­தினை எதிர்ப்­பவன் என்­ற­வ­கை­யிலும் அமெ­ரிக்­கா­வுக்கு என் மீது விருப்பம் உள்­ளது. அவ்­வ­ளவு தான். மேலும் பிர­பா­க­ரனின் கொலைப்­பட்­டி­யலில் எனது பெயர் இருப்­ப­தாக வைகோ கூறினார். அதன் பின்பு எனது பட்­டி­யிலில் பிர­பா­க­ரனின் பெயர் முத­லி­டத்தில் இருப்­ப­தாக பதி­ல­ளித்தேன். ஈற்றில் நான் சொன்­னதே நடை­பெற்­றது. அச்­சு­றுத்­தல்கள் மூலம் அடி­ப­ணி­ய­வைக்கும் செயற்­பா­டு­களை நான் அடி­யோடு வெறு­கின்றேன்.

கேள்வி:- கடந்த ஆண்டில் நடை­பெற்ற அர­சியல் புரட்­சி­பற்றி அவ­தானம் செலுத்­தி­யி­ருந்­தீர்­களா?

பதில்:- ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­வுடன் எனக்கு தெரிந்த தமிழ் பிர­மு­கர்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை அவ­ருடன் சந்­திப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தேன். இருப்­பினும் கூட்­ட­மைப்பு எழுத்­து­மூ­ல­மாக பல­கோ­ரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தது. ராஜ­பக் ஷ முதற்­ப­டி­யாக சில­வி­ட­யங்­களை செய்­கின்றேன் என்று கூறி­ய­போதும் அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. சிறி­சேன, ரணில் ஆட்­சியில் தற்­போது எது­வுமே கிடைக்­கவே இல்­லையே. ராஜ­பக் ஷ மீண்டும் ஆட்­சிக்கு வரு­வது உறு­தி­யா­கி­விட்­டது. நான் கோத்­தா­ப­ய­வையே கூறு­கின்றேன். அவர் நிச்­சயம் வெற்­றி­பெ­றுவார். ஆகவே தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் ராஜ­பக் ஷ 

தரப்­பி­ன­ருடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்து அவர்கள் ஆட்­சியில் செய்­ய­வேண்­டிய விட­யங்­களை எழுத்­து­மூ­ல­மாக பெற்­றுக்­கொள்­வதே சிறந்த அர­சியல் இரா­ஜ­தந்­திர நகர்­வாக இருக்கும்.

கேள்வி:- உங்­களின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற பிர­தமர் நரேந்­தி­ர­மோடி – மஹிந்த ராஜ­பக் ஷ சந்­திப்பு எவ்­வா­றி­ருந்­தது?

பதில்:- விடு­த­லைப்­பு­லி­களை அழித்­த­மையால் நான் ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வாக இருக்­கின்றேன். வைகோ, பிர­பா­கரன் இருப்­ப­தாக கூறிக்­கொண்­டி­ருந்தார். ஆனால் அவர் எங்கும் இல்லை. இலங்­கையில் தன்­மான ஆட்­சி­யொன்றை முன்­னெ­டுக்க கூடிய தகுதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கே உண்டு. கோத்­தா­ப­ய­வுக்கும் உள்­ளது. இது எனது நிலைப்­பா­டாகும். ஆனால் பிர­தமர் மோடி அவ்­வாறு சிந்­திக்க மாட்டார். எமது நாட்­டிற்கு(இந்­தி­யா­வுக்கு) எது நல்­லது, கூடாது என்று தான் சிந்­திப்பார்.

தனிப்­பட்ட விஜ­ய­மாக டெல்­லிக்கு வந்­தி­ருந்த மஹிந்­தவை பிர­தமர் மோடி சந்­திக்க மாட்டார். இலங்­கையில் உள்ள அர­சுக்கு பிடிக்­காது என்­பதால் சந்­திக்க வாய்ப்­பில்லை என்று கூறப்­பட்­டது. ஆனால் மஹிந்­தவின் உரை­யையும் அதற்­காக கூடிய கூட்­டத்­தி­னையும் கண்டு பிர­தமர் மோடியே மஹிந்­தவை சந்­திக்க தயார் என்று கூறி  பேச்­சு வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் பிர­தமர் மோடி வந்­த­போதும் மஹிந்­தவை சந்­தித்­தி­ருந்தார் அல்­லவா? தெற்­கா­சி­யாவில் பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட நாடு­களில் பிரச்­சி­னைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்­பதால் தான் நாம் அதிக அக்­கறை காட்­டு­கின்றோம்.

கேள்வி:- தமி­ழர்கள் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் பா.ஜ.கவின் அணு­கு­முறை எவ்­வாறு உள்­ளது?

பதில்:- எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் தமி­ழர்கள் - – சிங்­க­ள­வர்கள் இடையே பெரிய வேறு­பா­டில்லை. உதா­ர­ண­மாக மொழியை எடுத்­துக்­கொண்­டாலே பல ஒற்­று­மைகள் உள்­ளன. இந்­து­ச­ம­யத்­திற்கும், பௌத்­தத்­திற்கும் பல ஒற்­று­மைகள் உள்­ளன. எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் முஸ்லிம், கிறிஸ்­தவர் அல்­லா­த­வர்கள் இந்­துக்கள் என்று தான் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். ஆகவே, அந்த அடிப்­ப­டையில் தான் நாம் நோக்­கு­கின்றோம். ஆகவே தமி­ழர்­களின் கோரிக்­கையை அவர்கள் தான் கூற­வேண்டும். ராஜ­பக் ஷ செய்­வ­தாக கூறும் விட­யத்­தினை நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றுவார் என்­பதே எமது நிலைப்­பா­டா­க­வுள்­ளது.

கேள்வி:- இந்­திய -– இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மா­றா­வது இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிப்­பீர்­களா?

பதில்:- தேர்தல் நடை­பெற்று ஆட்சி மாறாது என்றால் எதுவும் செய்­ய­மு­டி­யாது. தற்­போ­தைய அர­சுக்கும் எனக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை.

கேள்வி:- பெரும்­பான்­மை­யான தமிழ் தலை­வர்கள் இலங்கை தமி­ழர்கள் விட­யத்தில் இந்­தி­யாவின் தலை­யீடு தேவை­யென்­பதை பகி­ரங்­க­மா­கவே கூறி­வ­ரு­கின்ற நிலையில் இத்­த­னை­கா­லமும் இந்­தி­யாவால் அதி­யுச்­ச­மான அழுத்­தத்­தினை வழங்க முடி­யா­தி­ருக்­கின்­றதே?

பதில்:- இந்­தியா வரை­ய­றுக்­கப்­பட்ட அளவில் தான் தலை­யீ­டு­களைச் செய்ய முடியும். தற்­போது வரையில் இந்­தி­யாவின் தேக்க நிலைக்கு அதி­கா­ரி­களே கார­ண­மா­கின்­றார்கள். பிர­தமர் மோடியின் ஆட்­சியில் கடந்த ஐந்து ஆண்­டு­களில் பெரி­ய­ளவில் எது­வுமே இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் இந்­தி­யாவால் பகி­ரங்­க­மாக இலங்கை அர­சுக்கு எத­னையும் கூற முடி­யாது. அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க முடி­யாது.

கேள்வி:- உங்­களின் கருத்­து­களின் அடிப்­ப­டை­யி­லான ஆட்­சி­யொன்று அமை­கின்­ற­போது தமி­ழர்கள் கோரும் அதி­கா­ரப்­ப­கிர்­வினை வழங்­குங்கள் என்று ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக கூறு­வீர்­களா?

பதில்:- ஆம், எனது கருத்­து­க­ளுக்கு செவி­ம­டுக்கும் ஆட்சி ஏற்­ப­டு­கின்­ற­போது,  தமி­ழர்­க­ளுக்­காக இலங்கை வீதி­க­ளி­லேயே இறங்கி அவர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­ளுக்­காக போராடத் தயா­ரா­கவே இருக்­கின்றேன். இந்த உறு­தி­மொழி மீது நீங்கள் நம்­பிக்கை கொள்ளலாம்.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட வகையில் இந்­துக்­கோ­வில்கள் மற்றும் வர­லாற்று இடங்கள் பௌத்­தத்தின் பெயரால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- இங்கு பௌத்­தர்­களே பெரும்­பான்­மை­யா­ன­வர்கள். அவர்­ளுக்கும் இந்­துக்­க­ளுக்கும் இடையில் மேலைத்­தேய கிறிஸ்­த­வர்கள் பிரி­வி­னையை உரு­வாக்கி மனங்­களில் நஞ்­சூட்­டி­யுள்­ளனர். எனது விருப்­பத்தின் பிர­காரம் தீர்­மா­னங்­களை எடுக்­க­வல்ல ஆட்­சி­யொன்று உரு­வாக்­கப்­பட்டால் இவ்­வா­றான விட­யங்­களே இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­பில்லை. பௌத்­தத்­திற்கும், இந்­துத்­து­வத்­திற்கும் இடையில் வேறு­பா­டுகள் பெரி­தாக இல்லை. அப்­ப­டி­யி­ருக்­கையில் இவ்­வி­ரண்­டிற்­கு­மி­டையில் பிள­வுகள் இருக்­கவே கூடாது.

கேள்வி:- இல்லை, தமி­ழர்கள் பௌத்­தத்­தினை எதிர்க்­க­வில்லை. ஆனால்  எந்த அர­சுகள் ஆட்­சி­யி­லி­ருந்­தாலும் அவர்­களின் துணை­யுடன் நடை­பெறும் ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளையே எதிர்க்­கின்­றார்கள்?

பதில்:- தமி­ழர்கள் அனை­வரும் விடு­த­லைப்­பு­லிகள் என்ற மன­நி­லை­யுடன் தான் சிங்­க­ள­வர்கள் இருக்­கின்­றார்கள். அது­போன்று தான் தமது மதமே முதன்­மை­யா­னது என்ற மன­நிலை அவர்­க­ளுக்கு உள்­ளது. அது வர­லாற்றில் உள்ள தவ­றாகும். ஆகவே வர­லாற்­றினை மாற்­றி­ய­மைக்க வேண்டும். புதிய வர­லாறு எழு­தப்­பட்டு இரு சம­யத்­தி­ன­ரையும் ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்டும். இதனை விட தமிழர் பகு­தியில் கலா­சார, பாரம்­ப­ரிய பண்­பா­டு­க­ளுக்கு எதி­ரான விட­யங்கள் இடம்­பெற்றால் நான் தனி­யா­ளா­க­வா­வது தலை­யீடு செய்வேன்.

கேள்வி:- ராஜ­பக்ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இந்த விட­யங்கள் எவையும் செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்­லையே?

பதில்:- அவ­ரு­டைய ஆட்சிக் காலத்தில் எதுவும் செய்­ய­வில்லை என்று கூறி மைத்­தி­ரி-­ரணில் அர­சினை கொண்­டு­வந்­தீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்­தார்கள். ஜன­நா­யக கட்­ட­மைப்பில் செயற்­பா­டு­க­ளற்­ற­வர்­களை மாற்­று­வது தான் வழமை. அதற்­காக முன்­னை­ய­வர்கள் வந்தால் நடக்­குமா நடக்­காதா என்­றெல்லாம் இரண்டு மன­நி­லையில் இருக்க முடி­யாது. தமிழ் மக்கள் யாரி;ல் திருப்­தியைக் கொண்­டி­ருக்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்கே வாக்­கு­களை வழங்க வேண்டும். ஆனால் அர­சியல் சூழ்ச்­சிக்குள் சிக்­காது சுய­மாக சிந்­திக்க வேண்டும்.

கேள்வி:- வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு கடந்த ஆண்டு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது (ஆகஸட்; 26.2018 பிர­சுரம்) வடக்கு, கிழக்கு முத­ல­மைச்­ச­ராக வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் இருந்­த­போது தமி­ழீழ பிர­க­ட­னத்­தினை செய்­யு­மாறு ராஜீவ் காந்தி உங்கள் ஊடாக தெரி­வித்­த­தாக கூறி­யி­ருந்தீர். ஆனால், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் அவ்­வா­றான கருத்­துகள் எவையும் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்று மறுத்துள்ளாரே?

பதில்:- அவர் பொய்யுரைக்கின்றார். எனக்கு பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை. வரதராஜப்பெருமாளும், அவருடைய செயலாளர் விக்னேஸ்வரனும் என்னைச் சந்தித்தபோது நான் ராகூPவ் காந்தி கூறிய விடயத்தினை தெரிவித்தேன். அப்போது அவர்கள், ராஜிவ் காந்தி இந்தக் கருத்தினை தம்மிடத்தில் நேரடியாக கூறவேண்டும் என்று கோரினார்கள். அது இயலாத காரியம் அல்லவா. தேர்தல் காலத்தில் அவரால் அவ்வாறு கூறமுடியாது. பின்னர் தேர்தலில் ராஜீவ் தோல்வி அடைந்தவுடன் வரதராஜப்பெருமாள் பிரகடனத்தினைச் செய்தார். அப்போது அனைத்துமே கைமீறிப்போய்விட்டன. பின்னர் வரதராஜப்பெருமாள் எமது நாட்டில் தான் அடைக்கலம் தேடி வந்திருந்தார்.

கேள்வி:- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ‘ஹிந்தி மொழி' தொடர்பான கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அமித் ஷாவின் கருத்து இந்திய அரசியலமைப்பினை மாற்றிவிடாது. முதலில் தாய்மொழிக்கே முன்னுரிமை. ஆனால் அண்மைய காலத்தில் ஆங்கிலம் சர்வதேச மொழியாகிவிட்டதால் அதனையும் கற்கின்றார்கள். தமிழகத்தில் ஹிந்தி மொழிக் கல்வியை அதிகப்படுத்துமாறு தனிப்பட்ட முறையில் என்னிடத்தில் பலர் கூறுகின்றார்கள். இளைய சமூகத்தினர் நல்ல வேலைவாய்ப்பிற்காக ஹிந்தியை கற்கின்றார்கள். ஹிந்தியில் ஆரம்பத்தில் உருது மொழி கலப்பிருந்ததால் கற்பதில் கடினம் இருந்தது. ஆனால், தற்போது மொழிசீர்திருத்தத்தின் பிரகாரம் அது இலகுபடுத்தப்பட்டு விட்டது.

கருணாநிதியை ஒருமுறை சந்தித்தபோது ஹிந்தி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்தேன். தமிழில், சமஸ்கிருதத்தில் உள்ள பலசொற்கள் ஹிந்தியில் இருப்பதைக் கூறினேன். அகராதியில் ஆதாரங்கள் உள்ளதாகவும் சொன்னேன்.

ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய பெயரும், கட்சியின் சின்னமான உதயசூரியனும் சமஸ்கிருத மொழியாகும். அவர் கட்சி சின்னம் கதிரவன் என்று என்றுமே கூறியதில்லையே. ஆகவே ஹிந்தி திணிப்பு என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு மொழி என்ற அடிப்படையில் சிந்தித்து செயற்பட வேண்டும்.


நேர்­காணல்:-  ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48