பாதையை முறையற்ற விதத்தில் கடக்க முற்பட்டவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

Published By: Digital Desk 4

22 Sep, 2019 | 12:33 PM
image

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (22) காலை 9.00மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டு சந்தியில் பாதையின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை மன்னார் வீதியுடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பாதையினை கடக்க முற்பட்ட 40 வயது மதிக்கத்தக்க திருநாவற்குளத்தினை சேர்ந்த சிதம்பரம் செல்லத்துரை என்ற நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 50மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும் பாதையினை கடக்க முற்பட்ட நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது  வீதியினுடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட சமயத்திலிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44