மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

Published By: Priyatharshan

17 May, 2016 | 05:02 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால்  நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் கால்வாய்களில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் மேலும்  அடைத்திருந்து மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றை சீரமைத்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09