வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் 16 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு கோட்டை மற்றும் மருதானையிலிருந்து களுத்துறை, அளுத்கம, வேயாங்கொடை,  அவிசாவளை, கண்டி, ரம்புக்கன மற்றும் அனுராதபுரம் ஆகிய புகையிரத நிலையங்கள் வரை விஷேட ரயில்கள் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.