2 பில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு , எலிட் நிறுவனம் மறுப்பு  ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன  - செஹான் 

Published By: R. Kalaichelvan

21 Sep, 2019 | 02:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்தாமரை கோபுர நிர்மாணத்தின் போது 200 கோடி நிதி மோசடி  எலிட் நிறுவனத்தினால் மோசடி  செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தற்போது அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன  என்று கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க,

பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானதாகும்.

இருவருக்குமிடையில் இன்றும் நல்லுறவு நிலை காணப்படுகின்றது. எதிர் தரப்பினரை வீழ்த்துவதற்கு நிச்சயம் இரு தரப்பினரும் திரைமறைவில் இணைந்து செயற்படுபகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு 2015ம் ஆண்டு கடந்த அரசாங்கத்தின் மீது பாரிய நிதி மோசடி உள்ளிட்ட ஜனநாய க மீறள் என்ற  பதத்தினை அடிப்படையாகக் கொண்டு பால குற்றச்சாட்டுக்களை தொடுத்தது . ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில்  அனைத்தும்  பகிரங்கப்படுத்தப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ள தேசிய நிதி  மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.  நாட்டை முன்னேற்றும் கொள்கையின் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படவில்லை, கடந்த அரசாங்கத்தை விமர்சித்தே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஏதும் கடந்த நான்கு வருட காலமாக நிரூபிக்கப்படவில்லை. அரசியல் அழுத்தத்தில் காரணதாகவே போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்று மனுதாரர்கள் குறிப்பிடும் நிலைமை தற்போது காணப்படுகின்றது.  தேர்தல் பிரச்சாரத்திற்கும் , கடந்த அரசாங்கத்தினை அவமதிக்கும் விதத்திலே  கடந்த வாரம் கொழும்பு தாமரை கோபுரம் அரைகுறை நிர்மாணிப்புக்களுடன் திறக்கப்பட்டது.

தாமரை கோபுர திறப்பு விழாவின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்வைத்த குற்றச்சாட்டு  சர்வதேச மட்டத்தில் தாக்கம் செலுத்தியது. கோபுர நிர்மாணிப்பிற்கு  எலிட் நிறுவனத்திற்கு  செலுத்திய 2 பில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்று முன்வைத்த குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும். 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் உள்ளுர் மட்டத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் , எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக எவ்வித மோசடியும் இடம் பெறவில்லை  என்று அறிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11