தெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன?

Published By: Vishnu

20 Sep, 2019 | 07:03 PM
image

(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை. 

அனாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடமாக கருதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். 

இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது பல்வேறு காரணிகள் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டுள்ளது. 

தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் உறுப்பினர்கள் ஊடகங்கள் இல்லாது இந்த வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். 

(சாட்சியத்தின் முழு விபரம் நாளைய வீரகேசரியில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27