ரயில் சமிக்ஞை கோளாறால் பொதுமக்கள் பெரும் அவதி : ஆத்திரமுற்ற பயணிகள் தாக்குதல்

Published By: Vishnu

20 Sep, 2019 | 05:41 PM
image

(இரா.செல்வராஜா)

ரயில்வே சாரதிகள் சட்டப்படி வேலையென்ற தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மருதானை பிரதான ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறின் காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தாமதமடைந்தன. 

ரயில் சேவை தாமதம் காரணமாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாமல் போனமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

ரயில்கள் தாமதமடைந்ததால் ஆத்திரமுற்ற பிரயாணிகள் ரயில் சாரதிகளையும் ஊழியர்களையும் தாக்கிய சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வேலை நிறுத்தம் தொடர்பாக ரயில்வே சாரதிகள் சங்கம் தலைவர் இந்திக்க தொடங்கொடவிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது , 

எமது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க போராட்டத்திற்கும் மருதானை பிரதான சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறிற்கும் எவ்வித தொடர்புமில்லை. 

ரயில்கள் தாமதமடைந்ததினால் ஆத்திரமுற்ற பிரயாணிகள் சாரதிகளையும் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பள உயர்வு , ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார். 

இதேவேளை நேற்று இரவு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் பண்டாரவளை பகுதியில் நிறுத்தப்பட்டதால், கல்வியற் கல்லூரிக்கு நேர்முகப்பரீட்சைக்கு செல்ல வேண்டிய ஆரிசிரிய பயிளுனர்கள் 6 மணித்தியாலங்கள் தாமதித்தே நேர்முகப் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

இதற்கிடையே நள்ளிரவு 12 மணிமுதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட போவதாக ரயில் சாரதிகள் , நிலைய அதிபர்கள் , கார்ட் மார்கள் , தொழிநுட்ப வியலாளர்கள் ஆகியோரின் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அதன் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது , அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் , சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க போராட்டத்தினால் பெரிதும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று மாலை இடம்பெறவிருந்த அலுவலக ரயில் சேவைகளும் தமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21