பாகிஸ்தான் செல்லவேண்டாம் என ஐ.பி.எல். அணிகள் இலங்கை வீரர்களிற்கு அழுத்தம்- அப்ரிடி

Published By: Rajeeban

20 Sep, 2019 | 04:55 PM
image

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டாம் என இலங்கையின் சிரேஸ்ட வீரர்களிற்கு ஐபிஎல் அணிகள் அழுத்தம் கொடுக்கின்றன என பாக்கிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் சஹீட் அப்ரீடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோவொன்றில் அவரது இந்த கருத்து இடம்பெற்றுள்ளது.

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டாம் என இலங்கையின் முன்னணி வீரர்களிற்கு ஐபிஎல் அணிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என தெரிவித்துள்ள அப்ரீடி கடந்த முறை அவர்கள் பாக்கிஸ்தானிற்கு வருவதாகயிருந்தவேளை நான் அவர்களுடன் உரையாடினேன் அவ்வேளை  இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் தாங்கள் பாக்கிஸ்தானிற்கு வர விரும்புவதாகவும் எனினும் நீங்கள் பாக்கிஸ்தான் சென்றால் உங்களிற்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது என ஐபிஎல் அணிகள் அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் எப்போதும் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆதரவளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள அப்ரீடி  இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கின்ற வேளைகளில் நாங்கள் ஒருபோதும் வீரர்களிற்கு ஓய்வளித்தது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தன்னுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு கிரிக்கெட் விளையாட வரும்  இலங்கை வீரர்கள் பாக்கிஸ்தான் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படுவார்கள்   எனவும் தெரிவித்துள்ளார்.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07