படத்தை நீண்டநாள் ஓட்டுவதற்காக விஜய் அரசியல் பேசுகிறார்- வைகை செல்வன் 

Published By: Daya

20 Sep, 2019 | 04:15 PM
image

படத்தை நீண்ட நாள் ஓட்டுவதற்காக நடிகர் விஜய் அரசியல் பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

” தற்போதுள்ள சூழலில் திரைப்படங்கள் பத்து நாட்கள், இருபது நாட்கள் ஓடுவதே சிரமமாக இருக்கிறது. இந்த சூழலில் திரைப்படங்களை பரபரப்பிற்குள்ளாக்குவதும், அதே சமயத்தில் அப்படத்தின் பெயரை வெகுஜன மக்களிடையே கொண்டு செல்வதற்கும் பரபரப்பு அரசியல் தேவைப்படுகிறது. சமீப காலத்தில் திரைத்துறைக்கு இதுபோன்ற பரபரப்பு அரசியல் தொற்றிக்கொண்டுள்ளது. 

ஒரு காலத்தில் கதையை நம்பி படமெடுத்தார்கள். அந்தக் கதையின் வலுவான கட்டமைப்பால் அந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்கு, சற்றேக்குறைய ஓராண்டிற்கு மேல் எல்லாம் திரைப்படம் ஓடியிருக்கிறது. தற்போது கதையே இல்லாமல் திரைப்படத்தை எடுத்து விட்டு, எப்படியாவது ஒரு மாதம், இரண்டு பாதங்களுக்கு ஒட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புக்குள்ளாக் குகின்றனர். 

அதனால் தான் இதுபோன்ற திரைப்பட விழாக்களிலும், இசை வெளியீட்டு விழாவிலும் இத்தகைய அரசியலைப் பேசி, அதன் மூலமாக தன்னுடைய திரைப்படத்தை ஓட்டுவதற்கான அரசியல் செய்து வருகின்றனர். அவற்றில் பல நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவரின் திரைப்படங்கள் அப்படித்தான் ஓடுகின்றன. 

சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதெல்லாம் விஜய் தெரிவித்துள்ளார். யாரை எங்கு வைக்க வேண்டுமோ... அங்கு தான் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றியை அளித்து ஆட்சியைத் தொடர அனுமதித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல் இன்று எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் வரை எங்களுக்கு மக்கள் வெற்றியைத் தந்திருக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52