கன­டாவில் மீண்டும் பரவும் காட்டுத் தீ.!

Published By: Robert

17 May, 2016 | 03:36 PM
image

கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வகையில் போர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார்.

ஏற்கனவே போர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே அந்தப் பகுதியின் வான்பரப்பில் அடர்ந்த மஞ்சள் நிறப்புகை பரவி வருவதாகவும், காற்றில் அடர்த்தியாக சாம்பல் உள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் போர்ட் மெக்மர்ரி நகரைச்சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கிருந்து 80,000 இற்கும்  அதிகமான மக்கள் வெளியேற்­றப்­பட்டமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52