எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவியுள்ளது - சவூதி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

20 Sep, 2019 | 11:44 AM
image

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர்.

இதனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந் தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இந்நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு ஈரான் தான் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் வழங்கி உதவியதாக சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.

இந்த ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் நாட்டின் வடக்குத் திசை யிலிருந்து ஏவப்பட்டன. அவற்றை ஈரான் தான் வழங்கியது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதியாகி உள்ளது. ஏமனிலிருந்து எந்த வகையிலும் தாக்குதல்கள் நடத்தப் படவில்லை.

மேலும் 18 ஆளில்லா விமானங்களும், 7 அதி துல்லிய ஏவுகணைகளும் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும், பத் திரிகையாளர்கள் கேட்டபோது அல் மால்கி ஈரானை நேரடியாக குற்றம் சாட் டவில்லை. "குற்றவாளிகள்" உறுதியாக அடை

யாளம் காணப்பட்டவுடன்  அது குறித்து வெளியிடப்படும்  என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆலோசகர்  ஹெசமோடின் ஆஷ்னா தனது டுவிட்டரில்,  'ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டன அல்லது ஏவப்பட்டன என்பது பற்றி சவூதி அரேபியாவுக்கு எதுவும் தெரியாது என்பதை பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்தது.

மேலும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு அவற்றை ஏன் தடுக்கத் தவறியது என்பதை விளக்கத் தவறிவிட்டது' எனக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52