UPDATE : நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஆராய்வு - சஜித் எதிர்ப்பு

Published By: Vishnu

19 Sep, 2019 | 06:36 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்ற அதிகாரத்தை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தத்தை விஷேட அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தமையானது மோசமான விடயமென்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாரும் கலவரமடையத் தேவையில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எமக்கு வெற்றிக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினமும் வேட்புமனு தாக்குதலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சிக்கின்றமையை மிகவும் மோசமான செயலாகவே நான் கருதுகின்றேன். இவ்வாறான செயற்பாடு மக்களின் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறியாக்குகின்றது. 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிச்சயமாக நீக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே நீக்கியிருக்கலாம். அல்லது செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலாவது இது பற்றி கலந்துரையாடியிருக்கலாம். அன்று தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டவுடன் எவ்வாறு இது போன்று சிந்திக்கிறார்கள் என்று விளங்கவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08