Necrotizing Pancreatitis என்ற பாதிப்பு புதிய சிகிச்சை

Published By: Daya

19 Sep, 2019 | 03:42 PM
image

Necrotizing Pancreatitis என்ற பாதிப்பு கணையம் அழுகிவிடும் நிலையை குறிக்கும். பக்டீரியாவின் தொற்றுகளால் கணையத்திலுள்ள திசுக்கள் இறந்துவிடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் கணையத்தை முழுமையாக உடலில் இருந்து அகற்றி விடுவது தான் இதற்கான சரியான தீர்வாக இருக்கும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கணையம் என்பது வயிற்றுப்பகுதியின் பின்னால் அமைந்து, நாம் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்குரிய என்சைம்களை உருவாக்கி, உணவை செரிக்கவைத்து, சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்கிறது.

பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்பட்டு, அதை குணப்படுத்த முடியாத நிலை இருந்தால் கணையம் பாதிக்கப்படும். அதேபோல் கணையத்தில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருந்தால், அதை உரிய தருணத்தில் சிகிச்சை எடுத்து, குணப்படுத்தாமல் இருந்தாலும் இத்தகைய நிலை ஏற்படும்.

அடிவயிறு வீக்கம், காய்ச்சல், வாந்தி, நீர் வறட்சி, குறைந்த இரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை ஆகியவை இதன் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

கணையத்தில் பக்டீரியா தொற்று ஏற்பட்டு தீவிரமாகிவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு நோயாளியை நன்கு பரிசோதித்த பின், நாசோகாஸ்ட்ரீக் குழாயை மூக்கின் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி, திரவ நிலையில் உணவை உண்ண செய்வார்கள், கணையம் செய்யும் பணியை இவை மேற்கொள்ளும். வேறு சிலருக்கு கணையப் பகுதியில் இந்த பாதிப்பை ஏற்படுத்திய இறந்த திசுக்களை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்றுவார்கள்.

இதனால் கணையம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்தால், உடனடியாக முழுமையாக பரிசோதனை செய்து, அதற்குரிய சிகிச்சை பெற்றுக்கொண்டு, ஜீரணத்திற்கு உதவும் கணையத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29