இலக்கு தவறியது ஆளில்லா விமானம்? ஆப்கானில் 30 பொதுமக்கள் பலி

Published By: Rajeeban

19 Sep, 2019 | 03:02 PM
image

ஆப்கானிஸ்தானின் படையினரும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட ஆளில்லா விமான   தாக்குதல் காரணமாக 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் மறைவிடங்களை இலக்குவைத்து புதன்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் எனினும் தற்செயலாக இவை பைன் தோட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள்  மீது விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோட்டமொன்றில் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக 30ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பினரை இலக்குவைத்து ஆப்கான் மற்றும் அமெரிக்க படையினரின் தாக்குதல் இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் உயிரிழப்புகள் குறித்த விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை.

நங்ஹர்கர் மாகாண அரசாங்கத்தின் அதிகாரியொருவர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதுடன் ஒன்பது உடல்களை இதுவரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தோட்டத்தில் தொழில்புரிந்தவர்கள் கூடாரமொன்றில் அமர்ந்திருந்தவேளை ஆளில்லாவிமானதாக்குதல் இடம்பெற்றது என பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தீயை மூட்டிவிட்டு அமர்ந்திருந்தவேளை ஆளில்லா விமானங்கள் அவர்களை இலக்குவைத்தன என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17