கத்தியால் குத்தப்பட்ட மாணவன் - தடுக்கமுயலாமல் வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்த சக மாணவர்கள்- அமெரிக்காவில் சம்பவம்- வீடியோ இணைப்பு

19 Sep, 2019 | 11:25 AM
image

நியுயோர்க்கில் மாணவன் கத்தியால் குத்தப்படுவதை  தடுக்காமல் சக மாணவர்கள் அதனை தங்கள் மொபைல்போன்களில் படம் பிடித்துக்கொண்டிருந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நியுயோக்கின் நஸ்ஸாவ் பகுதியில் உள்ள ஓசன்சைட் உயர்தர பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கசீன் மொறிஸ் என்ற 16 வயது மாணவன் மோதலின் போது தாக்கப்பட்டதுடன் கத்தியால் குத்தப்பட்டுள்ளான்,எனினும் சக மாணவர்கள் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் காயங்கள் காரணமாக உயிரிழந்தான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் மாணவியொருவர் தொடர்பிலேயே இடம்பெற்றது  குறிப்பிட்ட மாணவியுடன் டேட்டிங் செல்வது தொடர்பாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டி தீவிரமடைந்து ஆறு பேர் மொறிஸ் மீதும் அவரது நண்பர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனா பின்னர் கத்திக்குத்தும் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 50ற்கும் அதிகமான மாணவர்கள் காணப்பட்டனர் அவர்கள் வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளனர் எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மொறிசை காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை என்ன செய்வது என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரி மாணவர்கள் காசீன் மொறிசிற்கு உதவாமல் வேடிக்கை பார்த்தனர்,அவர்கள் அதனை வீடியோவில் பதிவு செய்தனர் மொறிசின் மரணத்தை தடுக்காமல் வீடியோவில் அதனை பதிவு செய்துள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது சகோதரனின் மரணம் குறித்து அஞ்சலி நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள மொறிசின் சகோதரி கெயன்னா மொறிஸ் தனது சகோதரின் மார்பிலிருந்து குருதிபெருக்கெடுத்துக்கொண்டிருந்த வேளை சிலர் உதவ முன்வராமல் வீடியோவில் படமெடுத்துக்கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

எனது சகோதரன் யாருக்கும் உதவுவதற்கு முதலில் முன்வரக்கூடியவர் ஆனால் அவரது மரணத்தை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17