ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தற்காலிகமாக தடைவிதிப்பு

Published By: Digital Desk 3

19 Sep, 2019 | 11:27 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் வர்த்­தக அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ரான இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் கொழும்பு பிர­தான  நீதிவான் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்­டுள்ள 5 வழக்­கு­களை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று  தடை உத்­த­ர­வொன்றை பிறப்­பித்­துள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் முன்­வைத்­துள்ள மீளாய்வு  மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்டபோதே, மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெ­திகே இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். ஜோன்ஸ்­டனின் குறித்த மீளாய்வு  மனுவை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி இறுதி தீர்ப்பு அறி­விக்­கப்­படும் வரை இந்த தடை உத்­த­ரவு அமுலில் இருக்கும்  வகை­யி­லேயே இந்த தற்­கா­லிக தடை உத்­த­ரவு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை­யி­லான 5 வருட காலப்­ப­கு­தியில், சதொச ஊழி­யர்கள் 153 பேரை அவர்­க­ளது உத்­தி­யோ­க­பூர்வ பணியில் இருந்து நீக்கி, அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி, அர­சுக்கு 4 கோடிக்கும்  அதிக நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாகத் தெரி­வித்து ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் கொழும்பு பிர­தம நீதிவான் நீதி­மன்­றத்தில் 5 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன.

இந்த வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்ள விதம் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி தனது சட்­டத்­த­ர­ணிகள் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் அடிப்­படை ஆட்­சே­பங்­களை முன்­வைத்தபோதும் அதனை நிரா­க­ரித்து, அவ்­வ­ழக்­கு­களை விசா­ரிக்க கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ள­தா­க வும், எனவே  நீதிவான் நீதி­மன்றின் குறித்த தீர்­மா­னத்தை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறும் தன்னை நிரபராதி என அறிவித்து விடுவிக்குமாறும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேல் நீதிமன்ற மீளாய்வு மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08