சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published By: Raam

17 May, 2016 | 02:34 PM
image

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா அருகில் நிலைகொண்டிருந்த தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் வடக்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரமாகச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு 48 மணிநேரத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரில் தொடர் மழையாக பெய்யும் சில நேரங்களில் கனமழை பெய்யும். தரைக்காற்று அதிகமாக வீசும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47