ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Published By: Digital Desk 4

18 Sep, 2019 | 09:47 PM
image

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல்  நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான  வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார்.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக  அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அத்துடன்  அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும்  இம்முறை மாறுப்பட்ட விதத்தில் 17 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளமை முக்கிய அம்சமாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34