கோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை

Published By: Vishnu

18 Sep, 2019 | 08:47 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம் வசீம் )

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் ஊழல் குறித்த கோப் குழுவின் விசாரணைகளுக்கு வருகை தராமை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் கோப் தலைமையிடம் மன்னிப்பை கோரினர். 

கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக வரும் படி இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைக்கு பணிப்பு விடுத்தும் அதன் தலைவர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வருகை தரவில்லை. 

இந்நிலையில் இன்று ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் சம்மி சில்வா, பொருளாளர் லலித் ரம்புக்வெல, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் கோப் குழுவில் விசாரணைகளுக்காக  கலந்துகொண்டனர். 

கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி கோப் குழுவிற்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்களின் தனிப்பட்ட காரணிகளுக்காக வருகை தராத நிலையில் இன்று அது குறித்து குழுவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

எனினும் ஆசிய கிரிக்கெட் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதால் தமால் வருகை தர முடியாது போய்விட்டதாக தலைவர் சம்மி சில்வா தெளிவுபடுத்தினார். பொருளாளர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரம்முடியவில்லை எனவும், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தான் தான் இலங்கை -நியுசிலாந்து போட்டி கண்காணிப்புக்கக்க சென்றதாகவும், லலித் ரம்புக்வெல்லவிற்கு சுகவீனம் ஏற்பட்டதாகவும் தாம் வருகை தராததற்கான காரணிகளை முன்வைத்தனர். 

எனினும் தங்களின் உரிக்க காரணிகளை எழுத்து மூலமாக சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் நீங்கள் மன்னிப்புக் கேட்பதால் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது வேறு ஒரு நாளில் விசாரணைகளுக்கு வரவேண்டும் எனவும் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07