சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட  அதிகாரியை சந்தித்த பிரதமர்

Published By: Vishnu

18 Sep, 2019 | 07:37 PM
image

(நா.தனுஜா)

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மினர் மற்றும் அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நிலையில், அவர்கள் இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது சீன ஜனாதிபதி ஷி-ஜின்-பின்னின் கொள்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஒரு மண்டலம், ஒரு பாதை' திட்டத்தின் ஒரு அங்கம் என்ற வகையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், இலங்கையின் விவசாய மற்றும் பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு சொஜிங் நகரின் நிறுவனமொன்று தயாராகி வருவதாகவும் சென் மினர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். 

இதன்போது இலங்கைக்கும், சொஜிங் நகருக்கும் இடையில் பொருளாதார மற்றும் வாணிப தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலகலாவிய ரீதியில் பொருளாதாரத்தை மையப்படுத்திய அதிகாரம் தற்போது ஆசியாவை கேந்திரமாகக் கொண்டு நகர்வடைவதாகவும், எனவே ஆசிய பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க சவால்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். 

மேலும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பலவற்றினதும் சனத்தொகையும், பொருளாதாரமும் வெகுவாக வளர்ச்சியடைந்துவரும் நிலையில் இப்பிராந்திய நாடுகள் பரஸ்பர சந்தை வாய்ப்புக்கள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04