ஓய்வு பெற்றார் இந்திய அணி வீரர் மோங்கியா!

Published By: Vishnu

18 Sep, 2019 | 02:59 PM
image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் மோங்கியா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

கடந்த 2001 இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மோங்கியா, 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உள்ளடங்கலாக 1,230 ஓட்டங்களையும், 14 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். எனினும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் கூட விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்திய அணியின் முதல் சர்வதேச இருபதுக்கு - 20 ஆட்டத்தில் இடம்பெற்ற மோங்கியா 38 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் கார்த்திக் ஆட்ட  நாயகன் விருது பெற்றாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்களை எடுத்தவர் மோங்கியா தான். 

இது மாத்திரமே அவர் எதிர்கொண்ட இருபதுக்கு - 20 போட்டியாக அமைந்தது.

2003 உலகக் கிண்ண இறுதிச்சுற்றில் அவுஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றது இந்திய அணி. இந்திய அணியில் கும்பிளேவை சேர்க்காமல் சலதுறை ஆட்டக்காரர் என்கிற காரணத்துக்காக மோங்கியாவை ஆட வைத்தார் அப்போதைய இந்திய  அணித் தலைவர் கங்குலி. 

பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ஓட்டங்களை கொடுத்ததுடன் துடுப்பாட்டத்திலும் 12 ஓட்டங்களை மட்டும் எடுத்தார் மொங்கியா. 

பி.சி.சி.ஐ. யால் அங்கீகரிக்காத ஐ.சி.எல். அமைப்பில் சேர்ந்து விளையாடியதால் பிறகு மோங்கியாவால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போனது. 

கடந்த வருடம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 42 வயது மோங்கியா, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58