ஆசிரியரை குத்திக் கொலை செய்த நான்காம் வகுப்பு மாணவன்

Published By: Daya

18 Sep, 2019 | 02:57 PM
image

மும்பையில் நான்காம் வகுப்பு மாணவன் ஆசிரியரை குத்திக் கொலை செய்ததற்கு அவன் கூறிய காரணங்களால் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது வீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்புக்களை நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார்.

குறித்த பெண்ணிடம்  4ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பகுதிநேர வகுப்பில் கற்று  வந்தான்.

இந்த நிலையில், மாணவனின் தாய், ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். கடன் தர மறுத்த ஆயிஷா மாணவனின் தாயை திட்டியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த மாணவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவனும், தாயும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் மாணவன் கத்தியுடன் ஆயிஷா வீட்டிற்கு வந்தான். அங்கு முகம் கழுவிக்கொண்டிருந்த ஆயிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ஆயிஷா இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

உயிருக்கு போராடிய ஆயிஷாவை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.  ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை குத்திக்கொன்ற 9 வயது மாணவனை கைது செய்தனர். 

குறித்த மாணவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாவது, ஆசிரியையிடம் தனது தாய் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து அவரை குத்திக் கொன்றதாக தெரிவித்தான்.

ஆனால், மாணவன் கொலைக்கு வேறு 2 காரணங்களையும் தெரிவித்திருக்கிறான். அவன் தனது வீட்டு அருகே வசிப்பவர்களின் முன்பு ஆசிரியை தன்னை அடித்ததாகவும் அதனால் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளான்.

தனது தந்தையிடம் கூறும் போது சிலர் ஆசிரியையை குத்திக்கொல்ல 2 ஆயிரம் ரூபா கொடுத்ததாகவும் அப்படி செய்யவில்லை என்றால் தன்னை ஆற்றில் தூக்கி வீசிவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் தெரிவித்துள்ளான். 

மாணவனின் இந்த வாக்குமூலங்களால் பொலிஸார் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.

குறித்த சம்பவம் தொடர்காக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17