இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல் ; பின்னிலையில் நெதன்யாகு  ; தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு

Published By: Priyatharshan

18 Sep, 2019 | 02:17 PM
image

இஸ்ரேலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின்  நெதன்யாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி இஸ்ரேலின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று இடம்பெற்றது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப் பதிவுப்போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவுசெய்தமையால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அண்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இடம்பெற்றது.

இந்நிலையில் தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்பின் முடிவில், நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

120 ஆசனங்களைக்கொண்ட  பாராளுமன்றத்தில், நெதன்யாகுவின் கட்சி 55 முதல் 57 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

பென்னி கன்ட்சின் புளூ அண்ட் ஒயிட் கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான 66 இடங்களை பெறுவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிக்தார் லிபர்மேனின் இஸ்ரேல் பெட்டினு கட்சி 8 முதல் 10 இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி வாக்கு எண்ணிக்கை நிலவரம் அமைந்தால், யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். நாட்டின் நீண்டகாலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவுகளை மேற்கொண்டனர்.

120 ஆசனங்களைக்  கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து 5 ஆவது முறையாக பிரதமர் பதவியை தக்கவைத்து கொள்ள போட்டியிட்டார். 

இதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தேசியவாத கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியமைத்தார். ஆனால் இஸ்ரேல் பெய்டனு கட்சி பெஞ்சமின் நெதன்யாகு  அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பாராளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. பெரும்பான்மைக்கு வெறும் ஒரு நபர்தான் குறைவு என்றபோதிலும் மாற்று ஏற்பாட்டை செய்யாமல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அதன்படி இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு இடம்பெற்றது.

இந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் இராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘பூளு அன்ட் வொயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

எனவே யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். பெஞ்சமின் நெதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21