தாமரை கோபு­ர நிர்மாண விவகாரம்: 200 கோடி ரூபா நிதி மோசடிபங்கு சீனா­வுக்கா? இலங்­கைக்கா?

Published By: J.G.Stephan

18 Sep, 2019 | 11:09 AM
image

(நா.தினுஷா)

முக்­கிய அர­சியல் தலை­மை­களின் தலை­யீடு இன்றி தாமரை கோபு­ரத்தின் நிர்­மாண பணி­க­ளுக்­கென ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதியில் 200 கோடி ரூபா மோசடி இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு இல்லை.  ஆகவே இவ்­வாறு மோசடி செய்­யப்­பட்­டுள்ள நிதியின் பங்கு சீனா­வுக்­கு­ரி­யதா அல்­லது இலங்­கைக்­குரி­யதா என்­பது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின்   பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  துஷார இந்­துநில் தெரி­வித்­துள்ளார். 

அல­ரி­மா­ளி­கையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது ;

தாமரை கோபு­ரத்தின் நிர்­மாண பணி­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதியில் 200 கோடி ரூபா நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதன் திறப்பு விழா நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார். அதற்­க­மைய 2012 ஆம் ஆண்டே இந்த கோபு­ரத்தின் நிர்­மாணப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

சீனாவின் நிதி உத­வி­யு­ட­னேயே  இதன் நிர்­மாண பணிகள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆகவே ஜனா­தி­பதி கூறு­வது போன்று நிதி மோச­டிகள் இடம்­பெற்­றி­ருந்­தால அது எமது நாட்­டி­லுள்ள முக்­கி­யஸ்­தர்­களின் பங்­க­ளிப்பு எதுவும் இன்றி   இடம்­பெற்­றி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இல்லை. பல­த­ரப்­பு­ட­னான உடன்­ப­டிக்­கை­யி­னூ­டா­கவே இந்தக் கடன் உதவி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.  எனவே ஜனா­தி­பதி இது குறித்து விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்டும். 

அங்­க­வீ­ன­முற்ற இரா­ணுவ வீரர்கள் தமக்­கான கொடுப்­ப­ன­வுகள் முறை­யாக வழங்­கப்­ப­டு­வது இல்லை என்று கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்­டுள்­ளனர்.  ஆனால்  இதனை நான் அர­சியல் செயற்­பா­டா­கவே கரு­து­கிறேன். தேர்தல் காலம் நெருங்­கி­யுள்ள நிலையில் ஒரு ­சில  இரா­ணுவ வீரர்­களை பிர­தா­ன­மாக கொண்டு தமது எதிர்­கால அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கி­றார்கள்.  

2009 ஆண்டு முப்­பது வருட கால யுத்தம் நிறை­வுக்கு கொண்டு வரப்­பட்­டது. ஆகவே இந்த யுத்த காலப்­ப­கு­தி­யி­லேயே அதி­க­ள­வான இரா­ணுவ வீரர்கள் அங்­க­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். இந்­நி­லையில் யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது முதல் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கமே தொட­ர்ச்­சி­யாக ஆறு வரு­டங்­களை நாட்டை ஆட்சி செய்­தி­ருந்­தது. அதற்­க­மைய இந்த காலப்­ப­கு­திக்­குள்­ளேயே அங்­க­வீ­ன­முற்­ற­வர்­களின் நிவா­ர­ணங்கள்  அதி­க­ளவில்  பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அந்த காலப்­ப­கு­திக்குள் இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

அவ்­வாறு  அவர்­க­ளுக்­கான  நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் குறை­பா­டுகள் இருக்­கு­மாக இருந்தால் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை  நடத்தி அத­னூ­டாக பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுக்­கொள்ள வேண்டும். எது எவ்­வா­றா­யினும் இந்த அர­சாங்கம் ஆட்சி புரிந்த இந்த நான்­கரை வரு­டங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்ட  நிவா­ர­ணங்­களை வழங்­குதல் என பல்­வேறு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

தேர்­த­லுக்கு எங்­களின் வேட்­பாளர் தயா­ரா­கவே இருக்­கிறார். இந்­நி­லையில் ஏனைய சிறுபான்மை கட்சிகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று நினைத்தவுடன் வேட்பாளரை எம்மால் அறிவிக்க முடியாது. சகலருடனும் கலந்துரையாடி தகுதியான வேட்பாளர் ஒருவரை அறிவிப்போம். அதுவரையில் சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27