அமெரிக்கா, கலிபோர்னியாவின் சன்பெனடீனோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  இரு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கலிபோர்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை விடுமுறை களியாட்ட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாகவும் இது இரத்தக்களரியை ஏற்படுத்தும் ஒரு பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.